
TNPSC Tamil Current Affairs September 27, 2017
தலைப்பு : புதிய நிகழ்வுகள், பொது நிர்வாகம்
உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டியிடும் குறியீட்டு எண் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது
உலகளாவிய பொருளாதார மன்றத்தின் சமீபத்திய உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 40 வது உயர்ந்த போட்டி பொருளாதரமாக விளங்குகிறது.
இதன் பின்னணி:
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு (GCI) ஆனது ஒரு நாட்டின் 12 பிரிவுகள் அல்லது போட்டித்திறன் தூண்களை உள்ளடக்கிய தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
அவையாவன:
நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழல், சுகாதாரம் மற்றும் முதன்மை கல்வி, உயர்கல்வி மற்றும் பயிற்சி, பொருட்களின் சந்தை திறன், தொழிலாளர் சந்தை திறன், நிதி சந்தை வளர்ச்சி, தொழில்நுட்ப தயார்நிலை, சந்தை அளவு, வியாபார நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை.
இந்தியாவின் செயல்திறன்:
முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதன் முன்னேற்றத்திற்கு பிறகு இந்த ஆண்டு இந்தியா அந்நிலையை எட்டியுள்ளது.
இதன் செயல்திறன் ஆனது, போட்டித்தன்மையின் பெரும்பகுதிகளில் மேம்பட்டு காணப்படுகிறது.
இவற்றின் தரவரிசையானது, உள்கட்டமைப்பு (66 வது தரம்), உயர் கல்வி மற்றும் பயிற்சி (75) மற்றும் தொழில்நுட்ப தயார்நிலை (107) ஆகிய தரவரிசையை பெற்றுள்ளது.
மேலும் இத்தரவரிசையில் சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
_
தலைப்பு: சமீபத்திய நிகழ்வுகள்
உலக சுற்றுலா தினம்: 27 செப்டம்பர்
உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதன் மூலம், சுற்றுலா மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்புகளின் முக்கியத்துவத்தினை சர்வதேச சமூகம் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க கொண்டாடப்படுகிறது.
உலக சுற்றுலா தினமான 2017 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் : ‘நிலையான சுற்றுலா – மேம்பாட்டுக்கான வழி’.
_
தலைப்பு : செய்திகளில் நபர்கள், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்
ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் தார் ஸ்வாச்ச ஹய் சேவாவின் தூதுவர் ஆனார்
ஸ்ரீநகரிலிருந்து ஒரு இளைஞனான பிலால் டார் ஸ்ரீநகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் பிராண்ட் தூதராக மாறியுள்ளார்.
பிலால் டார் 12 வயதிலிருந்து ‘ஸ்வச்ச்தா அபியான்’க்கு பங்களித்து வருகிறார்.
_
தலைப்பு : செய்திகளில் நபர்கள், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்
அங்கோலாவில் 38 ஆண்டுகள் கழித்து முதல் புதிய ஜனாதிபதி
அங்கோலா ஜனாதிபதியாக ஜோவா லாரெங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை 38 ஆண்டுகளில் நாட்டின் முதல் புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இது முந்தைய ஜனாதிபதியான ஜோஸ் எடுர்டோ டோஸ் சாண்டோஸ் அவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து லாரெங்கோவை தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
முன்னர் அங்கோலா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார் லாரென்கோ. மேலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதாக உறுதி அளித்துள்ளார்.
0 responses on "TNPSC Tamil Current Affairs September 27, 2017"