
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs September 21, 2017 (21/09/2017)
தலைப்பு: பொது நிர்வாகம், நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் விளையாட்டுக்கள் பற்றிய புதிய நாட்குறிப்புகள்
கேலோ இந்தியா திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2017-18 முதல் 2019-20 வரையான காலத்திற்கு கேலோ இந்தியா திட்டத்தை ரூ. 1756 கோடி செலவில் மாற்றி அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டை தனிநபர் மேம்பாடு, சமுதாய மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, தேசிய மேம்பாடு ஆகியவற்றிற்கான முக்கிய கருவியாக விளையாட்டை மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
முக்கிய குறிப்புகள்:
மாற்றியமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், அடிப்படை வசதி, சமூதாய விளையாட்டுகள், திறன் அடையாளம் காணுதல், மீச்சிறப்புக்கான பயிற்சி, போட்டி அமைப்புகள், விளையாட்டுப் பொருளாதாரம் உள்ளிட்ட மொத்த விளையாட்டு சுற்றுச்சூழலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் சிறப்பம்சங்கள்:
இந்த திட்டத்தில் தெரிவு செய்யப்படும் விளையாட்டு வீர்ர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வீதம் 8 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவார்கள்.
இயற்கையாகத் திறன் பெற்ற இளைஞர்களுக்கு நீண்ட கால விளையாட்டு மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்படுவது, இதுவே முதல் முறையாகும்.
இளைஞர்கள் போட்டி விளையாட்டுகளில் திறன் பெற்று உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறும் வீரர்கள் குழுவாக உருவாக இது உதவும்.
இத்திட்டம், நாடெங்கும் விளையாட்டு திறன் மேம்பாட்டுக்கான 20 பல்கலைக்கழக மையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இதன் மூலம் விளையாட்டுத் திறன் கொண்ட இளைஞர்கள் இந்த திறனோடு கல்வி நிலையையும் மேம்படுத்தும் இரட்டிப்பு வாய்ப்பு கிடைக்கிறது.
துடிப்புள்ள ஆரோக்கிய வாழ்க்கை முறை கொண்ட குடிமக்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விளையாட்டுகளால் ஏற்படும் பால்இன சமத்துவம், சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய நிலைமை முற்றிலுமாக அங்கீகரிக்கப்படுகிறது. எனவே இந்த நோக்கங்களை அடைவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
“அனைவருக்கும் விளையாட்டுகள்” மற்றும் “மீச்சிறப்புக்கு விளையாட்டுகள்” ஆகியவற்றை மேம்படுத்துவதும் திட்டத்தின் நோக்கமாகும்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
சர்வதேச சமாதான நாள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச சமாதானதினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளினை வரவேற்கும் பொருட்டு, ஐ.நா. தலைமையகத்தில் அமைதி மணி அடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அகதிகளாகவும் குடியேறியவர்களுக்காகவும் ஆதரவளிக்க உலகெங்கிலும் உள்ள மக்களை ஈடுபடுத்துதல் மற்றும் அவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்கும் பொருட்டு சர்வதேச அமைதி நாள் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 2017 கருப்பொருள் : “அமைதிக்கு ஒன்றாக இணைந்திடுங்கள் : அனைவருக்கும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் கண்ணியம் அளித்திடுங்கள்”.
0 responses on "TNPSC Tamil Current Affairs September 21, 2017"