fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs October 12, 2017

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs October 12, 2017 (12/10/2017)

 

Download as PDF

தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், சமீபத்திய நிகழ்வுகள்

சில முக்கிய இனங்கள் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றன

மூன்று கடல் இனங்களான பாண்டிச்சேரி சுறா, செங்கடல் டர்பேடோ மற்றும் டென்டாக்ட் வண்ணத்துப்பூச்சி ஆகியவை அரேபிய கடலோர பகுதியின் கடல் நீரில் (ASR) அழிந்து விட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் அதன் இருப்புக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இவ்வாறு அறிவிக்கப்பபட்டுள்ளது.

விஞ்ஞானிகள் இப்பகுதியிலிருந்து இந்த இனங்கள் அறிவியலுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே மற்ற இனங்கள் அழிந்து வரும் கணடறிய முற்படுகின்றனர்.

ASR:

ASR என்பது செங்கடல், ஏடன் வளைகுடா, அரேபிய கடல், ஓமன் கடல் மற்றும் வளைகுடா ஆகியவற்றின் நீரை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும்.

இந்தியா, பஹ்ரைன், எகிப்து, ஈராக், ஈரானிய இஸ்லாமிய குடியரசு, இஸ்ரேல் மற்றும் பாக்கிஸ்தான் உட்பட 20 நாடுகளாலும் இப்பகுதி எல்லைகள் உள்ளன.

_

தலைப்பு : பொது நிர்வாகம், உலக நிறுவனங்கள், அறிக்கைகள், சமீபத்திய நிகழ்வுகள்

உலகளாவிய பட்டினி அட்டவணை (GHI) 2017

ஊட்டசத்துக் குறைபாட்டில் இந்தியாவுக்கு 100 வது இடம் பெற்றுள்ளது.

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) கடந்த  அக்டோபர், 2 2017 அன்று வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணையில் (GHI) இடம் பிடித்த 119 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தில் இருக்கிறது.

2014 -ம் ஆண்டில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினி அட்டவணையில் 97 வது தரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தரவரிசை மூன்று நிலைகளில் குறைந்துள்ளது.

உலகளாவிய பட்டினி அட்டவணை பற்றி:

உலகளாவிய பட்டினி அட்டவணை என்பது பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பசி நிலைமையை விவரிக்கும் ஒரு பல்வகைப்பட்ட நடவடிக்கை ஆகும்.

2006 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இந்த அறிக்கையானது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது.

உலகளாவிய பசி அட்டவணையில், நாடுகளானது ஒரு 100-புள்ளி அளவிலான இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 0 என்பது பட்டினி இல்லை என்பதை குறிக்கும் சிறந்த மதிப்பெண் ஆகும் மற்றும் 100 வது இடம் என்பது மோசமான நிலைமையில் இருப்பது ஆகும்.

முக்கிய குறிப்புகள்:

இந்தியாவின் GHI 2017 மதிப்பெண் 31.4 ஆகும், அது “தீவிர” பட்டினி பிரச்சனை பிரிவின் உயர் மட்ட இடத்தில் உள்ளது.

ஆசிய நாடுகளில் இந்தியா மூன்றாவது மோசமான நாடாக உள்ளது.

பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை நாடுகளை ஒப்பிடுகையில் மட்டும் சிறந்து விளங்குகிறது.

மற்றபடி, ஈராக், வடகொரியா மற்றும் பங்களாதேசம் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட சிறந்த மதிப்பைக் கொண்டுள்ளன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய உணவு தயாரிப்பாளராக இந்தியா இருந்த போதிலும், அது உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உடைய மக்களை கொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐந்து வயதிற்குட்பட்ட 21 விழுக்காட்டு இந்தியக் குழந்தைகள் எடை குறைபாட்டுப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக அதில் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாத ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அந்த அறிக்கை கூறுகிறது.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், சமீபத்திய நாட்குறிப்புகள், செய்திகளில் நபர்கள், யார் யார்?

யுவராஜ் சிங் லாரஸ்ன் முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்

யுவராஜ் சிங் மும்பையில் நடந்த லாரியஸின் ஒரு சிறப்பு நிகழ்வில், முதல் இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.

யுவராஜ் சிங் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஒரு இடது கையில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஆவார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் கபில்தேவ் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை லாரஸ் மாகசீன் கொண்டுள்ளது.

_

தலைப்பு : பொது நிர்வாகம், இந்திய வெளியுறவு கொள்கைகள்

இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான கூட்டுறவு

நீர்வளங்கள் தொடர்பாக இந்தியாவும் மொராக்கோ நாடும் ஒத்துழைப்பதற்கு வகை செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரு நாடுகளும் தங்களது நிபுணத்துவம், தங்களது சட்டங்கள் ஆகிய வரையறைக்கு உட்பட்டு, நீர் வளங்களை மேம்படுத்துவது, கையாள்வது தொடர்பான துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதற்கும் வழியமைக்கும்.

நீர் இயக்கக் கட்டுமானத்தை, குறிப்பாக பெரிய அணைக்கட்டுகள், நீர் மாற்றுத் திட்டங்கள் ஆகியவை தொடர்பான கருத்தாக்கம், அதைச் செயலாக்குவது, அதைப் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

0 responses on "TNPSC Tamil Current Affairs October 12, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image