fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs November 03, 2017

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs November 03, 2017 (03/11/2017)

 

Download as PDF

தலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்

உலக உணவு இந்தியா 2017

உணவு பதனிடும் துறையானது ஒரு மூன்று நாள் நிகழ்வான உலக உணவு இந்தியாவை முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், உணவுப் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பல்வேறு உலக அமைப்புகள் உலகம் முழுவதும் இருந்து வந்து கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகங்களுக்கு இடையில் பங்கு பெற உதவுகிறது.

உணவு பதப்படுத்தும் துறைக்கு இது போன்ற ஒரு நிகழ்ச்சியை இந்தியா முதன் முறையாக வழங்கி வருகிறது.

முக்கிய குறிப்புகள்:

உலக உணவு இந்தியா உணவுப் பொருளாதாரம் உருமாற்றுவதோடு, விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்தியாவை முதலீட்டிற்காக ஒரு முன்னுரிமை இலக்காகவும் உலக உணவுத் தொழிற்துறைக்காக வளர்க்கும் மையமாகவும் உருவாக்குவதை நோக்கமாக உள்ளது.

_

தலைப்பு : மாநிலங்களின் விவரம், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்

எட்டிக்கொப்பாகா (Etikoppaka) பொம்மைகள் புவியியல் சார்ந்த குறியீடு பெற்றது

எட்டிகோப்கா பொம்மைகள் ஆந்திராவில் மட்டும் பிரபலமல்ல ஆனால் நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் அப்பொம்மைகள் பெரும் புகழைப் பெற்றது.

ஆனால் இந்த கலை வடிவம் கடந்த தசாப்தத்தில் ஒரு பின்னடைவை சந்தித்தது.

முக்கிய குறிப்புகள்:

எட்டிகொப்பக பொம்மைகளை பிரபலமாக Lakkapidathalu என அறியப்படுகின்றன.

இவைகள், புவியியல் குறியீட்டின் பதிவு துறையின் மூலம் புவியியல் குறியீட்டினை இறுதியாக பெற்றது.

புவியியல் சார்ந்த குறியீடு பற்றி:

புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும்.

குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

_

தலைப்பு : மாநிலங்களின் விவரம், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்

லடாக் பகுதியில் உலகின் மிக உயரமான மோட்டார் சாலை அமைக்கப்பட்டது

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள எல்லைகள் சாலைகள் அமைப்பு (BRO) மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் லடாக் பகுதியில் உலகின் மிக உயர்ந்த மோட்டார் சாலை (19300 அடி) கட்டப்பட்டது.

முக்கிய குறிப்புகள்:

இந்த சாலை BRO-ன் கீழ் ‘திட்டம் ஹிமங்க்” கீழ் கட்டப்பட்டுள்ளது.

லாக்-லடாக் பிராந்தியத்தில் சாலைகள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் 1985 ஆம் ஆண்டில் புரோவின் ‘திட்டம் ஹிமங்க்” தொடங்கபட்டது.

_

தலைப்பு : உலக அமைப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள்

இந்தியா 21 புள்ளிகள் சரிந்துள்ளது – WEF பாலின இடைவெளி குறியீட்டு எண் 2017

உலக பொருளாதார மன்றத்தால் சமீபத்தில் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு எண் 2017 ஆனது வெளியிடப்பட்டது (WEF).

இத்தரவரிசையில், இந்தியா 144 நாடுகளில் 108 வது இடத்தில் உள்ளது

முந்தைய ஆண்டு தரவரிசைகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்தியா 21 இடங்கள் பின்தள்ளி காணப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்:

உலகளாவிய பாலியல் இடைவெளி அறிக்கை 2006 ஆம் ஆண்டு முதல் உலக பொருளாதார மன்றம் (WEF) மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

குறியீட்டில் பட்டியலிடப்பட்ட நாடுகளில் இது பாலின சமத்துவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது.

இந்த அறிக்கையானது நான்கு கருப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டு நாடுகளில் பாலின இடைவெளியின் பரிணாமங்களை அளிக்கும்.

அதாவது பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி சாதனை, சுகாதாரம் மற்றும் சர்வைவல், மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இக்குறியீடு இருக்கும்.

இந்தியாவின் தரவரிசை:

நான்கு காரணிகளில், இந்தியா மூன்றில் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

பொருளாதார பங்களிப்பு மற்றும் வாய்ப்பு என்ற காரணி அடிப்படியில் இந்தியா 139 வது இடத்தில் உள்ளது.

கல்வி சாதனை அடிப்படியில், 112 வது இடத்தில் உள்ளது.

0 responses on "TNPSC Tamil Current Affairs November 03, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
Join New Batch Live Class
close-image