
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs May 03, 2017 (03/05/2017)
தலைப்பு : மாநிலம், தேசிய செய்திகள், செய்திகளில் இடங்கள்
கொல்பூரில் நாட்டின் இரண்டாவது உயரமான கொடி
நாட்டின் இரண்டாவது மிக உயரமான 300-அடி கொடி மேற்கு மகாராஷ்டிராவின் கோலஹபுர்-ல் (Kolhapur) துவங்கப்பட இருக்கிறது.
ஒரு அறக்கட்டளையான கோலஹபுர் தெருவை அழகுபடுத்தும் திட்டம் (KSBP)-ன் (Kolhapur Street Beautification Project) மூலம் இந்த கொடி நிறுவப்பட உள்ளது.
சில குறிப்புகள்:
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நாட்டின் முதல் மிக உயரமான கொடி என்று கூறப்படுகிற 360-அடி கொடி மார்ச் 6 ம் தேதி அட்டாரி (Attari ) பகுதியில் நிறுவப்பட்டது.
_
தலைப்பு : மாநிலங்களின் விவரம், தேசிய செய்திகள், பொது நிர்வாகம்
மத்தியப் பிரதேசம் அதன் நிதி ஆண்டை மாற்றியுள்ளது
மத்தியப் பிரதேசம், தற்போதைய ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு சுழற்சியிலிருந்து ஜனவரி-டிசம்பர் மாத சுழற்சி நிதி ஆண்டிற்கு மாற்றியுள்ளது.
இதன்மூலம் நிதியாண்டு சுழற்சியை மாற்றியுள்ள நாட்டின் முதல் மாநிலமாக ஆகிறது.
இந்த மாற்றம் காலண்டர் ஆண்டோடு தொடர்புடைய நிதி ஆண்டை குறிக்கும்.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
பத்மா வெங்கடராமன் அவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது
சமூக சேவகரான பத்மா வெங்கடராமன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 2017 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் “அவ்வையார் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.
முன்னாள் இந்திய ஜனாதிபதியான ஆர்.வி. வெங்கட்ராமன், அவர்களின் மகள் பத்மா வெங்கட்ராமன் அவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பெண்களின் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்களின் புனர்வாழ்வுக்கு அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சில குறிப்புகள்:
2012 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் “அவ்வையார் விருது” வழங்குவது தொடங்கப்பட்டது.
இந்த விருது சமூக சீர்திருத்தம், பெண்கள் மேம்பாடு, கலாச்சாரம், ஊடகம், நம்பிக்கைக்கு இடையேயான நல்லிணக்கம், மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் பெண்கள் புரிந்த பணிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
_
தலைப்பு : மாநிலங்களின் விவரம், தேசிய செய்திகள், பொது நிர்வாகம்
தராங் சஞ்சார் வலைதளம் (Tarang Sanchar Web Portal)
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை (DoT) மூலம் “Tarang Sanchar” என்ற ஒரு இணையத்தளத்தினை தொடங்கியுள்ளது.
இந்த இணையதளம் எதற்காக?
ஒரு வட்டாரத்தில், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுடன் மொபைல் கோபுரங்களில் இது கதிர்வீச்சு வெளியேற்றப்படுவதை மக்கள் கண்காணிக்க உதவுகிறது.
மற்றும் அவர்களின் கணக்குகள் மற்றும் விளக்கங்களை சரிபார்க்கவும் இந்த “Tarang Sanchar” இணையதளம் உதவுகிறது.
மொபைல் கோபுரங்கள் பற்றி “தொன்மங்கள் மற்றும் தவறான கருத்துகள்” பற்றியும் மற்றும் அதன் மின்கசிவுகளை களையவும் தீர்வுகொண்டுவரும் பொருட்டு இலக்காக கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
கோபுரங்களின் நிலை பற்றிய ஒவ்வொரு நிலைமையும் அதன் உபயோகிப்பாளர்களுக்கு இந்த “Tarang Sanchar” இணையதளம் வழியாக கிடைக்கும்.
பொதுவாக, அரசாங்கம் பொதுவான அடிப்படையில் கோபுரங்கள் பற்றி சோதனை நடத்துகிறது.
ஆனால், இந்த “Tarang Sanchar” இணையதளம் வழியாக குறிப்பிட்ட கோபுரத்தின் சோதனையை கட்டணம் செலுத்தி அறிந்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட கோபுரங்களின் கதிர்வீச்சு நிலைகளை மக்கள் சோதிக்க அவர்கள் பரிசோதனைக்காக ரூ .5000 கட்டணம் செலுத்தியதன் மூலம் அரசாங்கத்தால் பரிசோதனை நடத்தி அதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "TNPSC Tamil Current Affairs May 03, 2017"