
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Nov. 08, 2016 (08/11/2016)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
சர் சி.வி. ராமனின் 128th பிறந்த நாள்
சர் சி.வி. ராமன் 128th பிறந்த நாள், நவம்பர் 7 ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
சர் சி.வி.ராமன் யார்?
அவர் 1888 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலுள்ள திருவானைக்காவலில் பிறந்தார்.
அவர் ராமன் விளைவினை கண்டுபிடித்தார். மற்றும் இவர் கண்டுபிடித்த ராமன் விளைவிற்க்காக 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
1954 ல், அவர் இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவர் ராஜகோபாலாச்சாரி மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரோடு பாரத ரத்னா விருது முதன்முதலில் பெற்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இராமன் விளைவு கண்டுபிடிப்பினை நினைவுகூறும் பொருட்டு இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரியில் அனுசரிக்கப்படுகிறது.
ராமன் விளைவு என்றால் என்ன?
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.
இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
வீரமாமுனிவர் பிறந்த நாள்
தமிழ்நாட்டில் நவம்பர் 08 ம் தேதி, வீரமாமுனிவர் (Viramamunivar) பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
வீரமாமுனிவர் யார்?
இத்தாலிய அவையினரின் மதகுருவான இவர் தமிழ் மொழியில் புகழ்பெற்ற கவிஞர்ஆவார்.
இவர் தன் பெயரை ஆங்கிலத்தின் காண்ஸ்டன்ஸோ பெஸ்கி (Constanzo Beschi) அல்லது கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) இல் இருந்து வீரமாமுனிவர் (Viramamunivar) என்று தமிழில் பெயர் மாற்றம் செய்துகொண்டார்.
தமிழ் இலக்கியத்தில் ஒரு பாரம்பரிய எழுத்தாளர் என அறியப்படுகிறார்.
அவரின் இலக்கிய படைப்புகள் :
இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
மேலும் அவர் முதல் முறையாக பொது தமிழை பயன்படுத்த இலக்கணம் எழுதியதற்காக “தமிழ் உரைநடை தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
தலைப்பு : அரசியல் அறிவியல் – இருதரப்பு உறவு
மூலிகை மருந்துகளுக்கு சர்வதேச ஒழுங்குமுறை சங்கம்
மூலிகை மருந்துகளுக்காக (IRCH) சர்வதேச ஒழுங்குமுறை நிறுவனத்தின் 9 ஆண்டு கூட்ட தொடர் புது தில்லியில் தொடங்கியுள்ளது.
இக் கூட்டம் ஆயுஷ் அமைச்சகத்தினால் அரங்கேற்ற படுகிறது.
WHO தலைமையகத்தில் இருந்து வரும் நிபுணர்கள் உட்பட, 36 பிரதிநிதிகள் 19 உறுப்பு நாடுகளில் இருந்து மூலிகை மருந்துகள் சர்வதேச ஒழுங்குமுறை கழகத்தின் (IRCH) கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மூலிகை மருந்துகள் சர்வதேச ஒழுங்குமுறை நிறுவனம் (IRCH) பற்றி :
IRCH உலக சுகாதார அமைப்பு 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மரபு மருத்துவத்தின் கட்டுப்பாட்டிற்காக பொறுப்பு அதிகாரிகளின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் அமைப்பு ஆகும்.
அதன் நோக்கமானது பொது சுகாதார மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தவும் மற்றும் மேலும் மூலிகை மருந்துகள் ஒழுங்குமுறை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
குறிப்புகள்:
IRCH முதல் வருடாந்திர கூட்டம், அக்டோபர் 2006 ல் பெய்ஜிங், சீனாவில் நடைபெற்றது.
IRCH எட்டாவது வருடாந்திர கூட்டமானது டிசம்பர் 2015 இல் ரியாத், சவுதி அரேபியாவில் நடைபெற்றது
For more Current Affairs in English and Tamil visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil and English on your Inbox.
Read TNPSC current affairs in English and Tamil. Download daily current affairs in English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "TNPSC Current Affairs in Tamil – Nov. 08, 2016"