
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 (04/01/2017)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
மேற்கு வங்காளம் – மிக நீளமான இலவச Wi-Fi சாலை
மேற்கு வங்கத்தில் பிஸ்வா பங்களா சாரணியின் சாலை முழுவதும் மிக நீளமான இலவச Wi-Fi சாலை அமலுக்கு வரவுள்ளது.
IT தொழில்புரியும் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு அந்த சாலை வழியாக பயணித்து அவர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இப்பணி செயல்படுத்தப்படவுள்ளது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்
சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாயி பூலே-ன் 186th பிறந்த நாள்
சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாயி பூலே-ன் (Savithri Bhai Phule) 186th பிறந்த நாளை முன்னிட்டு அன்று கூகிள் டூட்லே அஞ்சலி செலுத்துகிறது.
முக்கிய குறிப்புகள்:
இவர் ஜனவரி 3, 1831 அன்று மகாராஷ்டிராவின் Naigaon என்ற இடத்தில் பிறந்தார்.
அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளான பிரிட்டிஷ் ராஜ் கீழ் பெண்களுக்கு சம கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் பூலே நவீன பெண்ணியவாதி என அறியப்படுகிறார்.
அவர் 1848 ல் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார். மற்றும் அவரது கணவர் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலே உடன் சேர்ந்து பெண்களுக்காக ஒரு பள்ளி திறந்தனர்.
ஓரங்கட்டப்பட்ட கீழ் ஜாதி மக்கள் சம உரிமை பெற்றிட அவரது கணவர் மூலம் உருவாகிய சத்தியசோதக் சமாஜ் – ல் பூலே ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.
அவரது நினைவாக, புனே பல்கலைக்கழகம் 2014 இல் சாவித்ரிபாயி பூலே பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்
உலக பிரெயில் நாள்
லூயி பிரெயில் அவர்களின் நினைவாக அவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் 4 வது ஜனவரி அன்று உலக பிரெயில் நாள் என அனுசரிக்கப்படுகிறது.
லூயி பிரெயில் அவர்கள் பார்வையிழந்த மக்கள் எழுதுவது போலவே நன்றாக படிக்கும் பொருட்டு பிரெய்லி மொழியை கண்டுபிடித்தார்.
பார்வையிழந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் மற்றும் பிரெய்ல் படைப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டும் அவர்களுக்கு வாசிப்பு மற்றும் கற்றல் வாய்ப்புகளை தொடர்ந்து அணுகுவது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் உதவுகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 and English on your Inbox.
Read TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current Affairs in Tamil Jan 04, 2017"