
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 06, 2017 (06/02/2017)
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
தட்டம்மை மற்றும் ருபெல்லாவிற்கு ஒற்றை தடுப்பூசி (Measles and Rubella)
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூலம் தட்டம்மை மற்றும் ருபெல்லா (MR) தடுப்பூசி பிரச்சாரம் நாட்டில் தொடங்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள் :
MR பிரச்சாரம் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, லட்சத்தீவுகள்) உள்ளடக்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட 3.6 கோடி குழந்தைகளை பாதுகாக்க இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
தட்டம்மை பற்றி:
குழந்தைகளின் மரணத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றான தட்டம்மை ஒரு கொடிய நோய் ஆகும்.
பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிற மிகவும் தொற்று வாய்ந்த நோயாகும்.
தட்டம்மை மூலம் குளிர்காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் மூளை தொற்று போன்ற குழந்தைகளின் உயிருக்கு சிக்கலான பாதிக்கப்படக்கூடிய நோய்களை விளைவிக்கிறது.
ருபெல்லா பற்றி:
ருபெல்லா பொதுவாக ஒரு லேசான தொற்று நோயாக உள்ளது. ஆனால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இந்த தொற்று கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது என்றால், பிறக்கும் குழந்தைகளுக்கும் ருபெல்லா நோய் ஏற்பட்டுவிடும்(C.R.S).
இதனால் இது மிகப்பெரிய சுகாதார கவலையின் காரணம் ஆகும்.
_
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
மருத்துவச்செடியின் பல பயன்கள்
கேரளாவில் சோழநாயக்கன் (Cholanaickan) பழங்குடியினர் என பெயரிடப்பட்ட குறிப்பாக பாதிக்கப்பட்ட குழுக்களில் ஒன்று, பயன்படுத்தி வரும் Neurocalyx calycinus என்ற மருத்துவச்செடி வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் கொண்டதாக உள்ளது.
இந்த மருத்துவ செடி மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கு பகுதிகளில் மற்றும் இலங்கை பகுதிகளில் காணப்படுகிறது.
தீக்காயங்களுக்காக சிகிச்சைமுறை, காயம்-சிகிச்சைமுறை, புற்று நோய் எதிர்ப்பு, வலி நிவாரணி, எதிர்ப்பு அழற்சி, எதிருப்புசக்தியை அதிகரிக்கும், இரத்தவட்டுவிலிருந்து பெருக்குதல் மற்றும் எதிர்ப்பு ஆக்சிஜனேற்றி விளைவுகளை அதிகரித்தல் போன்ற பலன்களை உள்ளடக்கிய இந்த மூலிகையின் மருந்துகளை தயார் செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் காப்புரிமை வாங்க பதிவு செய்துள்ளனர்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current affairs in tamil feb 06, 2017"