fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Sep.5, 2016 (05/09/2016)

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.5, 2016 (05/09/2016)

 

RBI புதிய ஆளுநர்

திரு உர்ஜித் படேல் (Urjit Patel) ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ஆனார். ரிசர்வ் வங்கியின் முந்தைய கவர்னர் ஆக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த திரு ரகுராம் ராஜன் ஆவார்.

உர்ஜித்  படேல் பற்றி:

இதற்கு முன்னர் அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தவர். இப்போது அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 24 வது கவர்னர் ஆவார்.

 

போப் அன்னை தெரேசாவை புனிதராக (Saint) அறிவித்தார்

போப் பிரான்சிஸ் (Francis) வாடிகன் (Vatican) சிறப்பு பிரார்த்தனை சபையில் அன்னை தெரேசாவை ஒரு புனிதராக (Saint) அறிவித்தார்.

அன்னை தெரசாவை பற்றி:

mother teresa imageஅன்னை தெரேசா யூகோஸ்லாவியாவில் (Yugoslavia) உள்ள அல்பேனியாவில் (Albania)1910 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார்.

1929 ஆம் வருடம் அவர் ஏழைகளுக்காக பணியாற்ற இந்தியா வந்தார்.

1950 ஆம் ஆண்டில், அவர் வாழ்க்கை முழுவதும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டி “MISSIONARIES OF CHARITY” என ஒரு தொண்டு நிறுவனத்தை கொல்கொத்தாவில்(Kolkota) தொடங்கினார்.

இவருக்கு 1979-ல் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1980-ல் இந்தியாவின் மதிப்புமிக்க விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

அவர் கொல்கத்தாவில் செப் 5,1997ல் இறந்தார்.

 

இந்தியா G 20 மாநாட்டில் கலந்துகொண்டது:

G 20யின் 11வது உச்சி மாநாடு சீனாவில் உள்ள ஹாங்சோவில் இரண்டு தினங்கள் நடைபெற்றது. இந்தியாவின் பிரதம மந்திரியான திரு நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

G 20 இன் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டது.

இந்த மாநாடு சீனாவில் முதல் முறையாக நடைபெறும் G 20 உச்சி மாநாடு ஆகும். மற்றும் இரண்டாவது முறையாக ஆசிய நாட்டில் நடைபெறும் G 20 உச்சி மாநாடு ஆகும். முதல் முறையாக தென் கொரியாவில் உள்ள சியோல்-ல் 2010ல் G20 உச்சி மாநாடு நடைபெற்றது.

G 20 பற்றி:

இது உலக நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

G 20 உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் பெயர்கள்: அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய ராஜ்யம் (UK), அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

 

முனைவர் ராதா கிருஷ்ணன் விருது

Dr radhakrishnan imageஇந்த வருடம் சுமார் 379 ஆசிரியர்கள் முனைவர் ராதா கிருஷ்ணன் விருது பெற்றார்கள்.

விருதை பற்றி:

முனைவர் ராதா கிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து இந்திய உயரிய பதவியான குடியரசு தலைவராக உயர்ந்தவர். எனவே அவரது பிறந்த தேதியான Sep 5இல் அவரது பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு விருதாக முனைவர் ராதா கிருஷ்ணன் விருதை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்குகிறது.

இந்த விருதில் தமிழக அரசு சிறப்பு பரிசாக ரூபாய் 10,000, ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் கொண்டதாக வழங்குகிறது. இந்த ஆண்டு முதல் பரிசுத்தொகை ரூபாய் 5000 இலிருந்து ரூபாய் 10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.[/vc_column_text][/vc_column][/vc_row]

1 responses on "TNPSC Current Affairs in Tamil - Sep.5, 2016 (05/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image