fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Sep.20, 2016 (20/09/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.20, 2016 (20/09/2016)

பரம் ஈஸான்

இது ஐஐடி, கவுகாத்தியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியாகும்.

250 டெராபிளாப்ஸ் திறனும் 300 டெரா பைட் திறன் சக்தியும் உடைய இந்த பரம் ஈஸான், அந் நிறுவனத்தின் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிக்க மட்டுமல்ல ஆராய்ச்சி துறையில் முறையான திறமைகளை ஈர்க்கும் ஒரு சூழலை உருவாக்குவதிலும் உதவி செய்துள்ளது.

பரம் ஈஸான்-யை கணக்கீட்டு வேதியியல், கணக்கீட்டு திரவ இயக்கவியல், கணக்கீட்டு மின்காந்தவியல், சிவில் பொறியியல் கட்டமைப்புகள்,நானா தொகுதி பொருத்துதல், தேர்வுமுறைகள் போன்ற பயன்பாட்டு பகுதிகளில் பயன்படுத்த முடியும்.

வட கிழக்கு இந்தியாவில் பருவமழையின் போது பெறும் பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பரம் ஈஸான் மேலும் வானிலை, காலநிலை மாற்றம் கண்காணிப்பு, மற்றும் நில அதிர்வுகளை அளவிடும் செயல்களிலும் பயன்படுத்த முடியும்.

சீனாரஷ்யாவின் கடற்படை உடற்பயிற்சிகூட்டு கடல் 2016

சீன மற்றும் ரஷியன் நாடுகளின் கடற்படைகள் தென் சீனக் கடலில், நடத்திய கூட்டு கடற்பயிற்சி எட்டு நாட்கள் கழித்து முடிவுக்கு வந்துள்ளது.

இந்த கூட்டு கடற்பயிற்சி – 2016 தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிராந்திய சர்ச்சையை பின்னணியாக கொண்டு, அவர்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும்  அடையாளமாக தொடங்கப்பட்டது.

ஆஸ்திரேலியா இந்தியாவின் சிற்பங்களை திரும்ப கொடுத்தது

மூன்று பழம் பெரும் இந்திய சிற்பங்களை திரும்ப இந்தியாவிடம் ஆஸ்திரேலியா ஒப்படைத்தது.

தொள்ளாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கற்சிற்பம் தேவி பிரத்யங்கரா, மூன்றாம் நூற்றாண்டின் புத்த பக்தர்களின் கல்வெட்டு மற்றும் அமர்ந்த நிலையில் புத்தா-வின் சிற்பம் ஆகிய மூன்று சிற்பங்களை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

சீனாவின்  உலகிலேயே மிகப்பெரிய கப்பல் உயர்த்தி

சீனாவின் மூன்று கோர்ஜஸ் அணை (Three Gorges Dam) மீது சீன மற்றும் ஜெர்மன் பொறியியலாளர்கள் வடிவமைத்த உலகின் மிகப்பெரிய நிரந்தர கப்பல் லிப்ட்-ன் சோதனை இயக்கம் செயல்படுத்தப்பட்டது.

ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் இத்திட்டத்தின் கட்டுமான பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளது மேலும் இந்த கப்பல் உயர்த்தி, மூன்று கோர்ஜஸ் கார்ப் படி, உலகின் மிகப் பெரிய மற்றும் உலகின் மிக அதிநவீன கப்பல் உயர்த்தியாக உள்ளது.

நரோபா திருவிழா

naropa festivalஇந்தியாவின் லடாக் பகுதியில் புத்த மதத்தின் 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நரோபா திருவிழா ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

துருக்பா (Drukpa) பரம்பரையின் ஹெமிஸ் மடத்தில் செப்டம்பர் 16, 2016 அன்று தொடங்கிய திருவிழா செப்டம்பர் 22, 2016 அன்று முடிவுக்கு வருகிறது.

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான துறவிகள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இமயமலையின் கும்ப மேளா எனப்படும் நரோபா திருவிழாவிற்கு, இந்தியாவின் லடாக்கை சென்றடைவார்கள்.

இந்த நரோபா திருவிழா மிகப்பெரும் எண்ணிக்கையில் புத்தர்களை, குறிப்பாக துருக்பா கிளையினரை ஈர்க்கிறது.

இத்திருவிழா புத்த துறவியான நரோப்பாவின் 1000-வது பிறந்தாண்டு நினைவாக பாரம்பரியமாக லடாக்-கிலும் பூடான்-லும் கொண்டாடப்படுகிறது.

நரோபாவைப் பற்றி:

நரோபா ஒரு இந்திய மஹாசித்தராக இருந்தவர்.இவர் புத்த பெங்காலி மத குரு மற்றும் தலைவரான அதிஷா-வின் சமகாலத்தவர். நரோபா வங்காளத்தின் ஒரு உயரிய ப்ராமண குடும்பத்தில் பிறந்தவர்.

தனது 28வது வயதில் புகழ்வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சூத்ரம் மற்றும் தந்திரங்களை கற்றறிந்துகொண்டார். அவர் இறுதியில் வடக்கு வாசலின் பாதுகாவலர் (Guardian of Northern Gate) என்ற பட்டத்தையும் பெற்றார்.

அவர் திலோப மற்றும் அவர்களின் சகோதரர்களின் சீடனாக இருந்துள்ளார். இருந்தும் சில ஆதாரங்கள் அவர் நிகுமா என்றழைக்கப்படும் யோக குருவின் சீடனாக இருந்துள்ளார் என்றும் கூறுகிறது.

நியூயார்க் பிரகடனம்

summit for refugees and migrants உலக தலைவர்கள் செப்டம்பர் 16, 2016 அன்று  முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) துவங்கும் அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோர்க்கான (Refugees and migrants) உச்சி மாநாட்டின் திறப்பு விழாவில் நியூயார்க் பிரகடனத்தை ஏற்றார்கள்.

பிரகடனம் பற்றி:

தற்போதைய பிரச்சனைகளை சமாளிக்க மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உலகத்தை தயார் செய்யும் பொருட்டு இப்பிரகடனத்தில் தத்தணி பேச்சுவார்த்தைளின் மூலம் பாதுகாப்பான உலகளாவிய கச்சிதமான இடப்பெயர்வை மேற்கொள்ள இந்த பிரகடனம் ஒரு மைல் கல்லை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துள்ள பிரசவகால இறப்புகள்

ஐக்கிய நாடுகள் பொது சபை கூடுவதை முன்னோக்கி Lancet (UK வின் மருத்துவ பத்திரிகை) வெளியுட்டுள்ள ஆவணத்தின் ஒரு தொடர் அறிக்கையின் படி, உலகளவில் மகப்பேறு இறப்பு மற்றும் வேறுபாடுகளை குறைப்பதில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் அதே அளவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 45,000 தாய்மார்கள் பிரசவத்தின் பொது இறக்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பிரசவ இறப்பு இந்தியாவில் ஏற்படுகிறது.

0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.20, 2016 (20/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
Join New Batch Live Class
close-image