fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Sep.19, 2016 (19/09/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.19, 2016 (19/09/2016)

பழங்குடி பள்ளிகளில் பதின்மான அடுக்காய் அமைந்த அளவை முறை சார்ந்த(Biometric) வருகை

பதின்மான அடுக்காய் அமைந்த அளவை முறை சார்ந்த வருகை(Biometric) தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “ஸ்மார்ட் வகுப்பறைகள்” 25 பழங்குடி குடியிருப்பு பள்ளிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ்- ன் கூட்டு முயற்சியில் 1971 போர் பற்றிய படம்

வங்காளத்தின் சுதந்திர போர் 1971 பற்றிய ஆவணப்படம் இந்தியா மற்றும் பங்களாதேஷ்- ன் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட இருக்கிறது.

வங்காளத்தின் தேசத் தந்தையான பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் (Bangabandhu Sheikh Mujibur Rahman) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்தியா ஒரு “மெகா படம்” உற்பத்தியை துவங்கியுள்ளது.

ஷேக் முஜிபுர் பற்றி:

ஷேக் முஜிபுர் ரகுமான் அவர்கள் வங்காளத்தின் ஸ்தாபக தலைவராக இருந்தவர். அவர் வங்காள நாட்டின் ஜனாதிபதியாக இரண்டு முறை பணியாற்றியுள்ளார் மற்றும் 1972 மற்றும் 1975 இடையே அதன் வலுவான பிரதமர் ஆவார்.

அவர் அவாமி லீக் தலைவர் ஆவார். இவர் பங்கபந்து என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

சாக்க்ஷி மாலிக்கிற்கு உ.பி-ன் ராணி லக்ஷ்மி பாய் விருது

sakshi-malikஉத்தரபிரதேச மாநிலம் மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக்கிற்கு ராணி லக்ஷ்மி பாய் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

23 வயதான இந்த மல்யுத்த வீராங்கனை ரியோ டி ஜெனேரியோ ஒலிம்பிக்ஸ் 2016-இல்  58கிலோ மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

இந்தியாவிற்கு H5N1-லிருந்து விடுதலை

தற்பொழுது இந்தியா முற்றிலுமாக அதிகமாக பரவக்கூடிய தொற்றுநோய் வைரஸான ஏவியன் வைரஸ் (H5N1) அதாவது பறவைக்காய்ச்சலில் இருந்து விடுதலை ஆகியுள்ளது.

உலகத்தின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இந்திய நடிகை

பிரியங்கா சோப்ரா அமெரிக்க தொலைக்காட்சி தொடர் குவாண்டிகோவில் நடித்த பிறகு, உலகின் மிக உயர்ந்த சம்பளம் வாங்கும் டிவி நடிகைகளின் பட்டியலில் நுழையும் முதல் இந்திய நட்சத்திரமாக  மாறியுள்ளார்.

அமெரிக்க நடிகை சோபியா ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ள இந்த வரிசை பட்டியலில் பிரியங்கா எட்டாவது இடத்தில உள்ளார்.

இராட்சத ஆப்பிரிக்க மனை நத்தை (GALS):

giant-african-land-snailஇது சமீபத்தில் கோவா பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது உலகின் முன்னணி 100 நுண்ணுயிரிகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நிபுணர்கள் கருத்துப் படி, கோவாவில் இந்த நத்தையின் வருகையினால் இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் மொத்த மனித குறுக்கீடு தாக்கம் ஆகியவை ஏற்படுவதற்கான காரணிகள் தென்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலுக்கு தக்கபடி, இந்த நத்தை வேகமாக இனப்பெருக்கம் செய்வதால், இவை விரைவில் முழு சுற்றுச் சூழலையும் ஆக்ரமித்துக்கொள்ள நேரிடும் அபாயம் இருப்பதால் இந்த இனங்கள் ஆபத்தானதாகவும் பயிர்களுக்கு ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் மாறி உள்ளது.

1 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.19, 2016 (19/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image