fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Oct.14, 2016 (14/10/2016)

bob

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.14, 2016 (14/10/2016)

தலைப்பு: வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்

 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் பாப் டிலான் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை பெற்றார்.

பாப் டிலான் பற்றி:

அவர் இந்த விருதை வென்ற முதல் இசைக்கலைஞர் ஆவார்.

அவரது முந்தைய பாடல்களான “ப்ளோ இன் தி விண்ட்” மற்றும் “, “தி டைம்ஸ் தே ஆர் சேஞ்சிங்” போன்ற இசை பாடல்கள் அமெரிக்க மனித உரிமை மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்களின்  பண்ணாக ஆகியுள்ளது.

தலைப்பு: அரசியல் – நலம் சார்ந்த அரசு பொது விழிப்புணர்வு விழா மற்றும் பெண்களுக்கு  அதிகாரமளித்தல்

 

பெண்களின் இந்திய விழா – 2016

‘இந்தியா விழா 2016 பெண்கள்’ புது தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

விழா பற்றி:

இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மற்றும் இவ்விழாவில் உணவு, துணி, சுகாதார பொருட்களை, அரைக்கலன்கள், சூரியசக்தியினால் இயங்கும் பொருட்கள் ஆகியவைகளும்  அடங்கும்.

விழாவின் நோக்கம்:

இந்த விழா, இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள பெண்கள் தொழில் முனைவோர்களை  ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்தவும் உதவுகிறது.

அத்துடன் கரிம பொருட்கள் விளம்பரப்படுத்தவும் உதவுகிறது.

 

தலைப்பு: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மாசு கட்டுப்பாட்டு மதிப்பீடு

 

இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கான ஏற்பாடுகள் 

இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கான தனது ஏற்பாட்டினை எடுத்து,  எச்எஃப்சி -23, பசுமை வீடு வாயுவான ஓசோன் படலத்திற்கு ஊறு விளைவிக்கும் வாயுவின் பயன்பாட்டினை 2030-க்குள் அகற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

 

HFC (ஹெச்எஃப்சி) -23 பற்றி:

CO2 – வை விட 14,800 மடங்கு புவி வெப்பமயமாதல் திறன் கொண்ட ஒரு கிரீன்ஹவுஸ் வாயு ஆகும். அது எச்சிஎஃப்சி -22ன் துணை தயாரிப்பான இது, குளிர்பதன தொழில்துறையில்  பயன்படுத்தப்படும்.

எச்எஃப்சி 23 மற்ற பெயர்கள் : பிளூரோபார்ம் (Fluoroform), கார்பன் டரைபுளோரைடின், மெத்தில் டரைபுளோரைடின், பிளியோரில் (Fluoryl), ஃபிரியான் 23, Arcton 1, ஆர் 23.

தலைப்பு: அரசியல் – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

எக்சிம் வங்கி மற்றும் NDB ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவையின் அங்கீகாரம்

மத்திய அமைச்சரவை தேசிய அபிவிருத்தி வங்கி (National Development Bank) (என்.டி.பி.) அல்லது பிரிக்ஸ் வங்கி மற்றும் எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையில்  கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளது

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நோக்கம்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரிக் நாடுகள் மத்தியில் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு முன்னேற்றத்திற்கு  உதவுகிறது.

இந்திய எக்ஸிம் வங்கி பற்றி:

1982 இல் இந்தியா 1981 ஆம் ஆண்டின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி சட்டத்தின் கீழ், இந்த இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிறுவப்பட்டது.

எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா ஒரு ஊக்கி மற்றும் எல்லை வர்த்தகம் மற்றும் முதலீட்டீன் உயர்வுக்கும் வழிவகுகிறது.

தலைப்பு: நலத்துறை சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் – அரசு நிறுவனம்

ஜம்முவில் ஐஐஎம்

மத்திய அமைச்சரவை ஜம்முவில் ஐஐஎம் ஸ்தாபனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பு: மொத்தமாக பத்தொன்பது ஐ.ஐ.எம் தற்போது உள்ளன.

0 responses on "TNPSC Current Affairs in Tamil – Oct.14, 2016 (14/10/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image