fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Oct.12, 2016 (12/10/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.12, 2016 (12/10/2016)

தெலுங்கானாவின் புதிய மாவட்டங்கள்

தெலுங்கானா 21 புதிய மாவட்டங்களை மாநிலத்துடன் இணைத்ததன் மூலம், தெலுங்கானா மொத்தமாக பழைய 10 மாவட்டங்களையும் சேர்த்து 31 மாவட்டங்களை கொண்டு உள்ளது.

பின்னணி:

தெலுங்கானா ஜூன் 2 2014 ல், இந்தியாவின் 29-வது மாநிலமாக நடைமுறைக்கு வந்தது.

மேலும் ஹைதெராபாத் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கூட்டு தலைநகராக இருக்கும்.

அமுர் ஃபால்கான்ஸ் நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் வருகை

images ஆயிரக்கணக்கான அமுர் பால்கான் (Amur falcon) எனும் இரை தேடும் சிறிய பறவைகள் மணிப்பூரில் ஒக்ஹா (Wokha) மாவட்டத்திலும் மற்றும் நாகாலாந்தில் தாமென்கிலோங் (Tamenglong) மாவட்டத்திலும் வருகை தர ஆரம்பித்துவிட்டது.

அமுர் ஃபால்கான்ஸ் பற்றி:

அமுர் ஃபால்கான்ஸ் எனும் இரை தேடும் பறவை, உலகிலேயே தனது இரைக்காக நீண்ட பயணம் செய்யும் பறவையாக இந்த பறவை உள்ளது.

ஆண் பறவைகள் நிறம் பெரும்பாலும் சாம்பல் நிறமாகவும் மற்றும் பெண் பறவைகளின் நிறம் இருண்ட கிரீம் அல்லது அதன் அடிப்பகுதியில் ஆரஞ்சு நிறமாகவும் காணப்படும்.

அவைகள் மங்கோலியாவில் இருந்து வடகிழக்கு இந்தியாவை நோக்கி நேரடியாக பறந்து வந்து மியான்மரில் தங்குகின்றன.

அதன் எடை வெறும் 150 கிராமே ஆகும்.

கனடாவில் தமிழ் கலாச்சார மாதம்

கனடாவில் உள்ள ஒடவா (Odawa) பாராளுமன்றம், கனடாவில் சமூக நல முன்னேற்றங்களுக்காக தமிழர்களின் பங்கினை அங்கீகரித்து கனடா அரசு 2017 முதல் “தமிழ் கலாச்சாரம் மாதம்” என்று ஒவ்வொரு ஜனவரி மாதத்தினையும் கொண்டாட அறிவித்தது.

இதற்க்காக அறிவித்த தீர்மானம் எம் 24 என குறிப்பிடப்படுகிறது.

உலக பட்டிணி அட்டவணை

சமீபத்திய பட்டிணி அட்டவணையின் படி, இந்தியா 118 வளரும் நாடுகளில் 97வது இடத்தினை அடைந்து 2016 இல் போன்றே இன்னும் உலகில் தீவிர பட்டினி நிலைகளில் உள்ள ஒரு நாடு என மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய உண்மைகள்

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ( International Food Policy Research Institute) (IFPRI), இந்த பசி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தை இறப்பு, குழந்தையின் உயரத்திற்கு குறைந்த எடை மற்றும் குழந்தை வளர்ச்சி குறைவு (வயதிற்கு குறைந்த உயரம்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

118 நாடுகள் மத்தியில், பசி-பட்டினி நடவடிக்கைகளில் இந்தியா 97வது இடத்தினை பெற்றுள்ளது.

107 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் தவிர, அண்டை நாடுகளான சீனா (29), நேபால் (72), மியான்மர் (75), இலங்கை (84) மற்றும் வங்காளம் (90) ஆகியவற்றை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

1 responses on "TNPSC Current Affairs in Tamil – Oct.12, 2016 (12/10/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image