fbpx
  • No products in the basket.

2.1. முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு

இயற் பெயர் : துரைராசு

ஊர் : மதுரை அடுத்துள்ள பெரியகுளம்

பெற்றோர் : சுப்புராயலு, சீதாலட்சுமி

காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்

தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.

தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்


சிறப்பு பெயர்கள்

· கவியரசு (குன்றக்குடி அடிகளார்)

· சங்கப்புலவர் (குன்றக்குடி அடிகளார்)

· தமிழ்நாட்டு வானம்பாடி (அறிஞர் அண்ணா)

· திராவிட நாட்டின் வானம்பாடி (அறிஞர் அண்ணா)

· வீறுகவியரசர்

· பகுத்தறிவுக் கவிஞர் (தந்தை பெரியார்)

· பாவரசர் (மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்)

· கவிப்பேரரசர் (மு.கருணாநிதி)

· இரண்டாம் புரட்சி கவிஞர்

· பாவேந்தர் வழித்தோன்றல்

· கவி மாமன்னர்

· கவிச்சிங்கம்

· இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர்

· தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர்

· தன்மானக் கவிஞர்

· தமிழிசைப் பாவலர்

· மரபின் மைந்தர்


படைப்புகள்

· முடியரசன் கவிதைகள் (தமிழ்நாடு அரசு பரிசு)

· காவியப்பாவை

· கவியரசில் முடியரசன்

· தமிழ் இலக்கணம்

· வீரகாவியம் (தமிழ்நாடு அரசு பரிசு)

· பாடுங் குயில்கள்

· பாடுங்குயில்

· நெஞ்சு பொறுக்கவில்லையே

· மனிதனைத் தேடுகிறேன்

· தமிழ் முழக்கம்

· நெஞ்சிற் பூத்தவை

· ஞாயிறும் திங்களும்

· வள்ளுவர் கோட்டம்

· புதியதொரு விதி செய்வோம்

· தாய்மொழி காப்போம்

· மனிதரைக் கண்டு கொண்டேன்

· காப்பியம்

· ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)

· பூங்கொடி (பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை “உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது ‘பூங்கொடி’ என்று வாழ்த்தினார்)

· வீரகாவியம்

· வாழ்க்கை வரலாறு நூல்

· சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்


தன்வரலாறு நூல்

· பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்


கடிதம்

· அன்புள்ள பாண்டியனுக்கு

· அன்புள்ள இளவரசனுக்கு


சிறுகதை

· என்கோவின் காதல்

· இளம்பெருவழுதி


கட்டுரை

· எப்படி வளரும் தமிழ்?


சிறப்பு

இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்

இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது

இவரின் படைப்புகள் தமிழக அரசால் 2000 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது.


அறிஞர் அண்ணா இவரைத் “தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்

பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்

பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர்

தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்

குன்றக்குடி அடிகளார் ‘சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை’ என்று போற்றினார்

தந்தை பெரியார் ‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’

பேரறிஞர் அண்ணா, திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர்

மு.கருணாநிதி, திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.

எம்.ஜி.ஆர் ‘கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.’

கா.அன்பழகன் பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதம்  ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியசனார்’


முடியரசன் பாடல்கள்

· இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை

· இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு

· வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்

· மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்

· வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்

· பிணவினையில் தமிழுண்டோ

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link