fbpx
  • No products in the basket.

2.1 நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் அற நூல் / நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம்.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை

மொத்தம் : 400பாடல்கள் - 40அதிகாரங்கள்

கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் - 13 அதிகாரங்கள்

பொருட்பால் : 260 பாடல்கள் - 26 அதிகாரஙள்

காமத்துப்பால் : 10 பாடல்கள் - 1 அதிகாரம்

நாலடியாரின் சிறப்புகள்

· பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.

· இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.

· பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

· "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

மேற்கூறிய பாடலில் நாலடியாரையும் திருக்குறளும் ஒப்பிட்டு கூறியுள்ளனர்

ஆல் - ஆல மர விழுது

வேல் - வேம்பு, கருவேலம்

நாலு - நாலடியார் (நான்கடி கொண்டது)

இரண்டு - திருக்குறள் (ஈரடி கொண்டது)

· இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image