TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC அறிவியல் - இயற்பியல்
TNPSC - Indian Economy
TNPSC இந்திய புவியியல்
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - Group 1, 2 & 2A
TNPSC அறிவியல் - வேதியியல்
TNPSC அறிவியல் - உயிரியல்
TNPSC - General Science - Chemistry 











பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. திருக்குறள்
12. திரிகடுகம்
13. ஆசாரக் கோவை
14. பழமொழி
15. சிறுபஞ்சமூலம்
16. கைந்நிலை
17. முதுமொழிக் காஞ்சி
18. ஏலாதி
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 11 அறநூலாகவும், 6 அகநூலாகவும், 1 புறநூலாகவும் இருக்கின்றன
அறநூல்கள்
தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன அறநூல்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன.
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6. திரிகடுகம்
7. ஆசாரக் கோவை
8. பழமொழி
9. சிறுபஞ்சமூலம்
10. முதுமொழிக்காஞ்சி
11. ஏலாதி
அகத்திணை நூல்கள்
ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள அகநூல்கள்
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கார் நாற்பது
6. கைந்நிலை
புறத்திணை நூல்
புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய பொருள்களைப் பற்றியது. அதாவது போர், வீரம், கொடை, புகழ், அறநெறி போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப் பற்றியது.
பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள புற நூல்
1. களவழி நாற்பது
நூலும் ஆசிரியரும்
நூல்பெயர்
ஆசிரியர்
நாலடியார் – சமண முனிவர்கள்
நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
திருக்குறள் – திருவள்ளுவர்
திரிகடுகம் – நல்லாதனார்
ஏலாதி – கணிமேதாவியார்
பழமொழி நானூறு – முன்றுரை அரையனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
சிறுபஞ்சமூலம் – காரியாசான்
முதுமொழிக்காஞ்சி – கூடலூர்க்கிழார்
ஐந்திணை ஐம்பது – பொறையனார்
ஐந்திணை எழுபது – மூவாதியார்
திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதையார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார்நாற்பது – கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது – பொய்கையார்