
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tamil TNPSC Current Affairs jan 21, 2017 (21/01/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு என அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய காளை-கட்டுப்படுத்தும் விளையாட்டாக பொங்கலின் போது நடைபெறுகிறது.
ஒரு மக்கள் கூட்டத்தினில் பொஸ் இன்டிகோ காளையான பொதுவாக காங்கேயம் இனம் என அழைக்கப்படும் காலை அவிழ்த்துவிடப்படுகிறது.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் காளையின் திமிலை பிடித்து அது தப்பிக்க முயற்சி செய்யும் போது அதனை அடக்க முயற்சி செய்வார்கள்.
பங்கேற்பாளர் முடிந்தவரை காளையின் திமிலை பிடித்து சவாரி செய்து அதன் கொம்புகளில் உள்ள கொடியினை அகற்றி வெற்றி வாகை சூடுவர்.
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பு:
இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டில் விலங்குகளுக்கு கொடுமை இழைப்பதாகவும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறி ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றம் விலங்குகளை விளையாட்டுகளில் பயன்படுத்துவதையும் மாட்டு வண்டி பயணத்தில் பயன்படுத்துவதையும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா அல்லது நாட்டின் வேறு எந்த மாநிலத்தில் நடைபெறுவதையும் தடை செய்தது.
2016ல் சுற்றுசூழல் அமைச்சகம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவித்தது.
ஆனால் PETA போன்ற விலங்குகள் நல அமைப்பு, தமிழ்நாட்டில் இந்த ஜல்லிக்கட்டினை எதிர்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த தடை செய்தது என்ன?
சில குழுக்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஒரு பேரணியை நடத்தியது.
சென்னை எதிர்ப்புகளை தொடர்ந்து, பல மாணவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பேரணிகள் தொடங்கினர்.
தலைப்பு : வரலாறு: மாநிலங்களின் அமைப்பு மற்றும் பொது நிர்வாகம்
இமாசலப் பிரதேசம் – தர்மசாலா – மாநிலத்தின் இரண்டாம் தலைநகரம்
ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் காங்க்ரா(Kangra) மாவட்டத்தில் உள்ள தர்மசாலா (Dharmasala) நகரத்தினை மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் என பிரகடனம் செய்துள்ளார்.
சிம்லா அருகே அமைந்துள்ள தர்மசாலா ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு மற்றும் சிறந்த வரலாறும் உண்டு.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
2016 இந்தியாவின் வெப்பமான ஆண்டு
இந்திய வானிலை ஆய்வு துறை, 2016ல் பதிவாகும் பதிவுகளை கொண்டு 2016 னை இந்தியாவின் வெப்பமான ஆண்டு என கணித்துள்ளது.
ஏனெனில் ஆண்டின் வானிலை வழக்கத்தை விட வெப்பமானதாக இருந்தன.
_
தலைப்பு : வரலாறு: மாநிலங்களின் அமைப்பு மற்றும் பொது நிர்வாகம்
நாஷா முக்த் பிரச்சாரம் (Nasha Mukt Campaign ) – பீகார்
பீகார் அரசு நாஷா முக்த் பிரச்சாரத்தினை (நீண்ட மனித சங்கிலி) தொடங்கயது. இது உலகின் நீண்ட மனித சங்கிலி ஆகும்.
இதன் மூலம் மாநிலத்தினை போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
_
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஹைட்ரஜனின் ஒரு புதிய வடிவம் இயற்பியலாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரியாவின் இயற்பியலாளர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் புதிய வடிவம் ஆனது எதிர் அயனிகளை கொண்ட ஹைட்ரஜன் கொத்தாக (negatively charged cluster) உள்ளது.
அது ஹைட்ரஜனின் முன்பு எப்பொழுதும் காணாத ஒரு வடிவம் ஆகும்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, ஹைட்ரஜன் இருப்பதை அயன் கொத்தாக மட்டுமே அறியப்பட்டது.
மேலும் இது நேர் அயனிகளை கொண்ட (positively charged) கொத்தாக இருக்கும்.
[/vc_column_text][vc_column_text]
For more Tamil TNPSC Current Affairs jan and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tamil TNPSC Current Affairs jan and English on your Inbox.
Read Tamil TNPSC Current Affairs jan and English. Download daily Tamil TNPSC Current Affairs jan and English for TNPSC and Monthly compilation of Tamil TNPSC Current Affairs jan and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "Tamil TNPSC Current Affairs jan 21, 2017"