
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs dec in Tamil – Dec. 08, 2016 (08/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் அதன் பயன்பாடுகள்
Veterans Outreach App
இராணுவ வீரர்கள் சென்றடைய முயற்சியாகவும் மற்றும் ஒரு ஊடாடும் கட்டமைப்பை உருவாக்கவும் அரசாங்கம் ஒரு “Veterans Outreach App” என்று மொபைல் பயன்பாட்டினை முன்னெடுத்துள்ளது.
உதவி அதிகாரி ஜெனரல் கிளை கீழ் செயல்படும் இந்திய இராணுவ வீரர்கள் தலைமையிடம் (DIAV) இந்த பயன்பாட்டை தயாரித்துள்ளது.
மற்றும் குறிப்பாக வீரர்களுக்காக “இந்திய இராணுவ வீரர்கள் போர்டல்” (WWW. indianarmyveterans.gov.in) என்று அழைக்கப்படும் ஒரு வலை தளத்தை இயக்குகிறது.
“இருப்பிடம் கண்டறிதல் சேவைகள்”, “ஒரு கேள்வியை கேளுங்கள்” போன்ற சில குறிப்பிட்ட அம்சங்களையும் முன்னாள் ராணுவத்தினர் இடங்கள், ECHS polyclinics, ஸ்டேஷன் சிற்றுண்டி, Google வரைபடங்கள் பயன்படுத்தி இடம் கண்டறிதல், நாடு முழுவதுமுள்ள Sainik Aram Garh போன்றவற்றை செயல்படுத்தியதால் அனைத்தும் இந்த படைவீரர் அவுட்ரீச் ஆப்பில் கிடைக்கும்.
இந்த பயன்பாட்டின் மூலம் இந்திய இராணுவ வீரர்கள் போர்டல் மீது பதிவு செய்துள்ள வீரர்கள் மத்தியில் இருந்து “தோழர்கள் கண்டுபிடிப்பு” வசதிகள் கொண்டதால் அதன் மூலம் பழைய தோழர்கள் மீண்டும் கண்டுபிடிக்க உதவுகின்றன.
–
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அதன் புதிய தொழில்நுட்பம்
இந்தியா சர்வதேச அறிவியல் விழா (IISF-2016)
புது தில்லியில் “பொதுமக்களுக்கு அறிவியல்”– ல் கவனம் செலுத்த இந்த நாட்டின் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவான இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF-2016) தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவானது (IISF) ஒரு முக்கிய அறிவியல் நிகழ்வாக நடைபெற்று ஒரு பெரிய வெற்றியை பெற்றது.
மேலும், 2000 பள்ளி மாணவர்களை கொண்டு மிகப்பெரிய நடைமுறை அறிவியல் பாடம் வெற்றிகரமாக நடத்தியமைக்காக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனித்துவத்தை பெற்றது.
இளம் தலைமுறையினர் மத்தியில் அறிவியல் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் அறிவு மற்றும் கருத்து பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்கவும் 2016 – IISF உதவுகின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் பங்களிப்புகளை வெளிகொண்டுவரவும் அனைத்து அறிவியல் துறைகள் சம்பந்தப்பட்ட நிகழ்வாக 2016 – IISF உள்ளது.
–
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ்
திருவனந்தபுரத்திலுள்ள கோவளத்தில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (BPR&D) மற்றும் கேரள போலீஸ் இணைந்து 45 வது அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் – னை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய போலீஸ் தங்களின் விருப்பத்திற்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள்கள் கொண்டு ஒரு பொதுவான மேடையில் பல்வேறு போலீஸ் படைகள், சமூக விஞ்ஞானிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் மத்தியில் ஆலோசனைக்காகவும் விவாதிப்பதற்காகவும் இந்த தேசிய நிகழ்வு முக்கிய நோக்கமாக வழங்க உள்ளது.
நாட்டின் சகல போலிஸ் படைகளுக்கும் அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் ஒரு எதிர்கால திட்டத்தை வழங்க உதவும்.
முதல் அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் பாட்னாவினில் 1960 ல் நடைபெற்றது.
–
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
நீர் தினம்
நாட்டின் நீர் வள துறையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பின் நினைவாக அவரது பிறந்த நாள் 14 ஏப்ரல் அன்று “நீர் தினமாக” கொண்டாட வேண்டும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
–
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
தேசிய ரயில் திட்டம் – 2030
நாடு முழுவதும் பயணம் சேவை மற்றும் சரக்கு ரயில்களின் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, ரயில்வே அமைச்சர் மூலம் தேசிய ரயில் திட்டம் 2030 என்ற ஒரு வலைத்தளத்தினை (Http://www.nationalrailplan.in) இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
NRP – 2030 ஆனது ரயில் நெட்வொர்க்கிணை அனைத்து பிற போக்குவரத்து முறைகளோடு ஒருங்கிணைக்கும் பொருட்டும் மற்றும் நாடு முழுவதும் பல மாதிரி போக்குவரத்து நெட்வொர்க் அமைவதற்கான இசைவான முயற்சியாக உள்ளது.
–
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
2016க்கான TIME பத்திரிக்கையின் நபர்
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) அமெரிக்க தேர்தலில் அவரது தலைசிறந்த வெற்றிக்காக 2016க்கான TIME பத்திரிக்கையின் நபர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs dec in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs dec in Tamil and English on your Inbox.
Read TNPSC Current affairs dec in Tamil and English. Download daily TNPSC Current affairs dec in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs dec in Tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current affairs Dec in Tamil – Dec. 08, 2016"