
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs Dec in Tamil – Dec. 07, 2016 (07/12/2016)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
சோ ராமசாமி காலமானார்
“சோ” ராமசாமி என அழைக்கப்படும் சீனிவாச ஐயர் டிசம்பர்7, 2016 அன்று இறந்தார்.
அவர் ஒரு இந்திய நடிகர், காமெடியன், குணச்சித்திர நடிகர், ஆசிரியர், அரசியல் நையாண்டி செய்பவர், நாடக ஆசிரியர், உரையாடல் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பகமான பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் தமிழ்நாட்டின் வழக்கறிஞராகவும் அவர் இருந்துள்ளார்.
பார் மகளே பார் என்ற படத்தினில் காமெடியனாக 1963 ல் அறிமுகமானார்.
1963 முதல் 2005 வரை அவர் 180 தமிழ் படங்களில் நடித்துள்ளார் மற்றும் 5 படங்களை இயக்கியும் உள்ளார்.
மேலும் அவர் 20 நாடகங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார்.
–
தலைப்பு : அறிவியல் – சமீபத்திய விண்வெளி தொழில்நுட்பங்கள்
பி.எஸ்.எல்.வி PSLV C36 / RESOURCESAT-2A
இஸ்ரோவின் PSLV C36, 1253 கிலோ கொண்ட RESOURCESAT – 2A விண்வெளி விமானத்தினை ஒரு சூரிய சுற்றுவட்ட பாதையில் (SSO) செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் SHAR இருந்து இஸ்ரோவின் முப்பது எட்டாவது விமானம் பி.எஸ்.எல்.வி – C36 டிசம்பர் 07, 2016 அன்று முதல் ஏவுதளத்தில் (FLP) இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
சில அம்சங்கள்:
பல செயற்கை கோள்களை துருவ சூரிய சுற்றுவட்டப்பாதை, குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை, இணைநிலைச் ட்ரான்ஸ்பர் ஆர்பிட் (GTO) மற்றும் துணை GTO போன்ற பாதைகளில் ஏவக்கூடிய பி.எஸ்.எல்.வி. இஸ்ரோவின் பல்துறை ஏவுகணை ஆகும்.
சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு 36 வெற்றிகரமான ஏவல்களில் செயற்கை கோள்களை வழங்கி பி.எஸ்.எல்.வி. இஸ்ரோ மிகுந்த பயன்மிக்க ஏவுகணையாக உருவெடுத்துள்ளது.
–
தலைப்பு : வரலாறு – அரசு சார்ந்த நலத்திட்டங்கள் அதன் பயன்பாடுகள்
குளிர்கால மூடுபனி சோதனை பயிற்சி (WIFEX) 2016 -2017
இந்திய வானிலை ஆய்வு துறை தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குளிர்கால மூடுபனி சோதனை பயிற்சியினை (WIFEX) 2016-17 துவக்கியுள்ளது.
–
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்
ஹரியானாவில் திருமணங்களில் ஆயுதங்கள் தடை
திருமணங்களில் சமீபத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவங்களை தொடர்ந்து ஹரியானா மாநில அரசு திருமண விழாக்களில் ஆயுதங்கள் ஏந்தி செல்வதை தடை செய்துள்ளது.
இந்த தடை, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் விதிக்கப்பட்டுள்ளது.
–
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி
ஜனவரி 4 ல் இருந்து நீதிபதி khehar இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது இருக்கும் இந்திய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் (T S Takur) பணியிலிருந்து விலகுகிறார்.
நீதிபதி Khehar ஆகஸ்ட் 27, 2017 வரை அதாவது ஏழு மாதங்கள் வரை இப்பணி புரிவார். மேலும் இவர் சீக்கிய சமூகத்தில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதி ஆவார்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs Dec in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs Dec in Tamil and English on your Inbox.
Read TNPSC Current Affairs Dec in Tamil and English. Download daily TNPSC Current Affairs Dec in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs Dec in Tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current Affairs Dec in Tamil – Dec. 07, 2016"