fbpx
  • No products in the basket.

Tnpsc Current Affairs in Tamil – Sep. 10, 2016 (10/09/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.10, 2016 (10/09/2016)

 

வடகொரியாவின் ஐந்தாவது அணு ஆயுத சோதனை

வடகொரியாவின் ஐந்தாவது அணு ஆயுத சோதனையை (10கிலோ டன்) புங்க்கியெறி அணு ஆயுத பரிசோதனை கூடத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தியது.

 

ஜம்மு காஷ்மீர்இல் கல்லூரி பெண்களுக்கான இரு சக்கர வாகன திட்டம்

முதலமைச்சர் மெகபூபா முப்தி சிறப்பான ஒரு  இரு சக்கர வாகனதிட்டத்தை கல்லூரி செல்லும் பெண்களுக்காக ஜம்முகாஷ்மீரில் அறிமுகப் படுத்தியுள்ளார்.

50% மானியத்துடன் இருசக்கர வாகனம் வாங்க வழிவகை செய்துள்ளது அரசு.

 

கல்கி விருது இசை கலைஞர்களுக்கு வழங்கப் பட்டது:

பாடகர் அஸ்வத் நாராயணன் மற்றும் வயலின் கலைஞர் சாருமதி ரகுராம் ஆகியோர் கல்கி விருது பெற்றார்கள்.

 

யூனியன் பிரதேசம் ஆனா டெல்லி யில் நிர்வாக சிக்கல்கள் :

யூனியன் பிரேதசத்தில் LITEUTENANT GOVERNOR, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் “உதவி மற்றும் ஆலோசனை” இல்லாமல் ஒருதலைப்பட்சமாக  தேசிய தலைநகரை நிர்வகிக்க முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்ய உள்ளது.

சில குறிப்புகள்:

Article 239 (1): ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரால் ஆட்சி செய்யப்படும்.

Article 239AA: 69 வது சட்ட திருத்தம், 1991 ஆம் ஆண்டின் படி, டெல்லியின் கட்டுப்பாட்டில் இருந்து நிலம், காவல் மற்றும் சட்ட ஒழுங்கு விலக்கப்பட்டது.

ஆகஸ்ட் 4, 2016 அன்று: டெல்லி நீதிமன்றம், டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாக ஆட்சியாளர் (LITEUTENANT GOVERNOR) யின் கீழ் இயங்கும் என தெரிவித்தது.

இந்தியயாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள்:  தில்லி (National Capital Territory), பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சண்டிகர், லட்சத்தீவு, டையூ மற்றும் டாமன், மற்றும் தாத்ரா நகர் மற்றும் ஹவேலி. இவற்றில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்கள் இயங்குகின்றன.

16 August 2017

0 responses on "Tnpsc Current Affairs in Tamil – Sep. 10, 2016 (10/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.