
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.24, 2016 (24/09/2016)
MICA ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி
இந்திய விமானப்படை கண்களால் காணும் தொலைவுக்கு அப்பால் செல்லும் (BVR (Beyond Visual Range)) MICA ஏவுகணையை மேம்படுத்தப்பட்ட 2000 வானுர்தியிலிருந்து விண்ணில் எய்து இலக்கை தாக்கி வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்திய விமானப்படை தனது பயிற்சியின் போது MICA ஏவுகணையை மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் நகரத்திலுருந்து விண்ணில் எய்து சோதனை செய்தது.
ஏவுகணை பற்றி:
பிரான்சில் இருந்து புதிதாக கையகப்படுத்திய இந்த MICA ஏவுகணை மற்ற ஏவுகணைகளை விட அளவில் சிறியதாகவும் மற்றவை விட குறைவான உயரத்தில் பறக்கக்கூடியதாகவும் உள்ளது.
அதிக அளவில் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் பார்க்கும் தூரத்திற்கு அப்பால் சென்று பல குறிக்கோல்களுடன் இயங்கும் திறனுடையதாகவும் மேம்படுத்தப்பட்ட குறுகிய தூரம் செயல்பாட்டுத்திறனுடையதாகவும் மற்றும் 50கிமீ செயல்பாட்டு எல்லை வரம்புடையதாகவும் இது திறன்பட உள்ளது.
இந்தியா இந்த ஏவுகணையை தற்பொழுது பிரான்ஸ்-ம் இருந்து வாங்கியுள்ள 36 ரபாலே வானூர்தியில் பொருத்தியுள்ளது.
இந்தியா – பிரான்ஸ்-ன் மிராஜ் 2000-யை மேம்படுத்தும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா 450 MICA-வை ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளர்களிடம் (MBDA) இருந்து வாங்கியுள்ளது.
இந்திரா (INDRA) 2016
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு இராணுவ பயிற்சி ரஷ்யாவில் உள்ள Ussiriysk மாவட்டத்தில் விலாடிவோஸ்டோக் (Vladivostok), எனும் இடத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்திரா பற்றி:
இந்திய மற்றும் ரஷியன் நாடுகளின் கடற்படைகளின் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.
துப்பாக்கிச் சுடுதல், வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பலைகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள், மேலும் திருட்டு, பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்றவற்றிற்கு எதிராக நடவடிக்கைகள் இந்த உடற்பயிற்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன.
ரஷியன் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவானோவ் (Sergei Ivanov) 2003 ல் இந்த மிக முக்கியமான இருதரப்பு உடற்பயிற்சியை முன்மொழிந்தார்
பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சியில் வலுப்படுத்த சார்க் நாடுகளின் ஒப்புதல்
சார்க் நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சியில் வலுப்படுத்தும் இரண்டாம் கூட்டத்தில், அனைத்து நாடுகளின் முக்கிய தலைவர்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சியில் தங்களை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தும் பொருட்டு சார்க் பயங்கரவாத குற்றங்கள் கண்காணிப்பு மையம் (STOMD) மற்றும் சார்க் மருந்துகள் குற்றங்கள் கண்காணிப்பு மையம் (SDOMD) போன்றவை உருவாக்கப்பட்டு சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.
சந்திப்பு பற்றி:
முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்காணிப்பு அமைப்பு பகிர்வு, கருத்துப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை சமாளிப்பதில் பிராந்திய ஒத்துழைப்பு தகவல் பரிமாற்றம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை பற்றி சார்க் நாடுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
போதைமருந்து கடத்தல், பயங்கரவாதத்திற்கு இணைய குற்றங்கள், தற்கொலை பயங்கரவாதம், எதிர் தீவிரமயமாதல், ஊழல் மற்றும் பண மற்றும் நிதி மோசடி போன்ற மற்ற முக்கியமான தலைப்புகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.
இந்தியாவில் விரைவில் டெங்கு தடுப்பூசி
மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி சர்வதேச மையம் (International Centre for genetic Engineering and Biotechnology) (ICGEB)-ன் தில்லியின் ஒரு பிரிவு, டெங்கு தடுப்புமருந்து உருவாக்குவதற்கு இந்தியாவின் மிகப் பெரிய மருந்து நிறுவனமான சன் பர்மா-வுடன் (Sun Pharma) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.24, 2016 (24/09/2016)"