
[vc_row][vc_column][vc_column_text] www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 (07/01/2017)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
M – பரிவாகன்
பல்வேறு போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்கு, மக்களின் அணுகலை எளிதாக்கும் ஒரு மக்களை மையப்படுத்திய பயன்பாடாக இது உள்ளது.
பயன்பாட்டினை பற்றி:
இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், தேசிய பதிவேட்டில் இணைப்பதற்கு உண்டான பதிவு சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றிற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு இந்த பயன்பாட்டின் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்.
அவர்கள் விபத்துக்கள் நடந்ததை தெரிவிக்க, இதன் பயன்பாட்டின் மூலம் படங்களை கிளிக் செய்வதன் மூலம் விரைவாக மாநிலங்களின் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் RTOவிடம் புகார் தெரிவிக்க முடியும்.
மேலும் அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து புகார்களை தெரிவிக்க விரும்பினாலும் அதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
புது தில்லியின் உலக புத்தக கண்காட்சி
இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு இணைந்து நமது இந்திய அரசு புது தில்லியில் உலக புத்தக கண்காட்சியினை தொடங்கியுள்ளது.
எழுத்தாளர்களில் பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரையுள்ள காலம் வரை பெண்களின் பங்கினை கொண்டாடும் பொருட்டு புது தில்லி உலக புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கரு – “மனுஷி (Manushi)”.
நேஷனல் புக் டிரஸ்ட் தனது 60 ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் பொருட்டு அது தனது பயணத்தை வெளிப்படுத்தவும் புத்தகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
புது தில்லி உலக புத்தக கண்காட்சி, நமது புத்தக வழி அறிவினை ஆற்றலை வெகுவாக காண்பிக்கும் ஒரு தளமாக உள்ளது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
வட கிழக்கு சுற்றுலா அபிவிருத்தி சபை
DoNER அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் ஒரு பொது-தனியார் கூட்டு (பிபிபி) முறையில் பிரத்தியேக “வட கிழக்கு சுற்றுலா அபிவிருத்தி சபை” (NETDC) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக முதல் முறையாக ஒரு தனி சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
ஒரு பில்லியன் நேபால் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படுகிறது
நேபால் நாடு இந்திய 100 ரூபாய் நாணயத் நோட்டுகள் பற்றாக்குறை எதிர்கொண்டுள்ளது என்ற அதன் கோரிக்கையை ஏற்ற பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நேபால் ராஷ்ட்ர வங்கிக்கு ரூ 1 பில்லியன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 and English visit : www.tnpsc.academy/currentaffairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 and English on your Inbox.
Read TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current Affairs in Tamil Jan 07, 2017"