fbpx
  • No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Sep. 6, 2016 (06/09/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.6, 2016 (06/09/2016)

Download as PDF

தூய்மை ரயில்நிலையம் தரவரிசை பட்டியல்

தூய்மை ரயில்நிலைய தரவரிசை பட்டியலில் தமிழக்தின் கும்பகோணம் ரயில் நிலையம் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சேலம் 9 ஆவது இடத்தையும் , மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி முதல் 15 இடங்களிலும் வந்துள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் 121 மற்றும் 141 இடங்களை பிடித்துள்ளது.

16 ரயில் மண்டலங்களில் சென்னையை தலைமையாக கொண்ட மண்டலம் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தரவரிசை பற்றி :

ஸ்வச்ச் ரயில் ஸ்வச்ச் பாரத் (Swacch Rail, Swacch Bharat)திட்டத்தின் கீழ் IRCTC யால் M/s TNS India Pvt. Ltd. மூலம் பயணிகளிடையே நடத்தப்பட்ட தூய்மைக்கான கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆய்வு நடத்தி ரயில் நிலைய துறை தரைவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

GM கடுகுக்கு வணிக ஒப்புதல்

பல ஆய்வுகளுக்கு பின் சுற்றுசூழல் அமைச்சகம் DMH -11 ற்கான வியாபார பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் DMH -11 மனித மற்றும் விலங்கினங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்க கூடியது அல்ல என அறிவித்து உள்ளது.

GM கடுகு பற்றி:

கலப்பின் வகையான DMH -11, இரண்டு மாறுதலான மரபணு குணங்களை கொண்ட ஒரே வகை தாவரங்களை சேர்த்து உருவாக்கப்படுகிறது.

DMH-11 குறித்த சர்ச்சை:

கடுகு உணவுகளில் பலவிதமாக பயன்படுத்தப்படுவதால் இதற்கான வணிக ஒப்புதல் பல சர்ச்சைகளை எட்டியது. சுகாதார துரையின் பல ஆய்வுகளின் பிறகு ஒப்புதல் வழங்கபட்டுலுள்ளது.

DMH-11இன் பயன்கள்:

இது முந்தைய சாத கடுகு வகைகளை விட 30% விளைச்சல் தரும் சக்தியுள்ளவை. இதனால் நமது உணவு எண்ணையின் இறக்குமதி செலவுகள் கணிசமாக குறையும்.

சில குறிப்புகள் :

டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை செயலாளர் தீபக் பென்டல் -ஐ (Deepak Pentel) தலைமையாக கொண்ட டெல்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

DMH -11 இந்திய நாட்டில் வெளியிடப்பட்ட முதல் மரபணு பயிராகும்.

‘barnase / barstar’ தொழிலநுட்பம் மூலம் இதை உருவாக்கியுள்ளனர் .

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட்:

அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் குறைந்தது 1 சேவை மையமாவது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் நாடு முழுவதும் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசு 2019 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதிலும் மொத்தம் 242352 சேவை மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டிற்கு காவேரி நீர்:

உச்ச நீதிமன்றம் கோடை பயிர்களை காக்கவேண்டி தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை 15000 cusecs திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

16 August 2017

0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep. 6, 2016 (06/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.