TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
TNPSC இந்திய புவியியல்












இயற்பெயர்: தி. சு. சோமசுந்தரம்
பெற்றோர்கள்: கந்தசாமி மற்றும் சண்முகவடிவு
பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம்
பிறந்த வருடம்: 30 – 07 – 1950
முக்கிய குறிப்புகள்:
· அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ண நிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்கு தானே “கலாப்ரியா” என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
· பின்னர் “கசடதபர” எனும் இதழில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
· கசடதபரவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார்.
· நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர்.
· தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார்.
· கலாப்ரியா அவர்கள் குற்றாலத்தில் மூன்று முறை கவிதை பட்டறைகளை நடத்தினார்.
· நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத “அலி” கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ரியாவின் கவிதைகள் ஆண் பிள்ளை கவிதைகள் அல்லது பெண் பிள்ளை கவிதைகள் என தி. ஜானகிராமன் ஆல் பாராட்டப்பட்டவர்.
· “பொருனை” என்ற இதழை எழுதும் போது தான் தன் இயற்பெயரான சோமசுந்தரம் என்ற பெயரை கலாப்ரியா என்று மாற்றிக் கொண்டார்.
விருதுகள்:
· தமிழக அரசின் “கலைமாமணி விருது”
· கவிஞர் “சிற்பி இலக்கிய விருது”
· 2010ஆம் ஆண்டு “விகடன் விருது”, “சுஜாதா விருது”
· 2012ல் “கண்ணதாசன் இலக்கிய விருது”
· 2017இல் கலைஞர் மு. கருணாநிதி “பொற்கிழி விருது”
· 2017இல் “மனோன்மணியம் சுந்தரனார் விருது”
· 2018 இல் “ஜெயகாந்தன் விருது”
நூல்கள்:
· உலகெல்லாம் சூரியன்
· எல்லாம் கலந்த காற்று
· எட்டயபுரம்
· சுயம்வரம்
· வெள்ளம்
· நான் நீ மீன்
· அனிச்சம்
· மாற்றாங்கே
· தீர்த்த யாத்திரை
· வனம் புகுதல்
· கலாப்ரியா கவிதைகள்
மேற்கோள்கள்:
· “கொப்புகள் விளக்கி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துபோடும் மேய்பனை
ஒரு நாளும்
சிராய்பதில்லை
கருவமுட்டுகள்”
· “குழைந்தைகள் வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது”