fbpx
  • No products in the basket.

Why Samacheer Books? ஏன் சமச்சீர் புத்தகங்கள்?

samacheerIt is a simple answer,

“TNPSC is directly asking from them”

Take any recent TNPSC Question paper and analyse the questions, you can see that most (almost all) conventional topics are asked from Samacheer books. For your surprise, even TNPSC Group 1 (2015, 2016 and 2019) and Group 2 (2016, 2018) Mains written exam questions are directly asked from SAMACHEER BOOK BACK QUESTIONS. Also Samacheer books will give you an overall view of any topic. Why we suggest going directly by samacheer (rather than guides) is that, to cover the relevant topics fully. Remember that, our aim is to get a TOP RANK in TNPSC Exams. All Samacheer books are available for free in pdf.

Most importantly, you can see that, TNPSC Syllabus itself is an overall words/topics compiled from Samacheer lessons only. The syllabus itself is taken from Samacheer and the questions too is directly asked from Samacheer books. That is the reason why we suggest you to read Samacheer books.

We have already shown in our Answer Keys of various exams, where the questions are directly taken from Samacheer (Their pages in our books too).

When you go for any compiled one book / material (available in book stores), it may be a lesser pages material than Samacheer books (Our Samacheer compilation is of 6000+ pages). But they will not have all the contents so as to make you to complete the entire syllabus of both Prelims and Mains and also to get an TOP RANK in TNPSC Exams.

IMPORTANT:

There is NO NEED to read NCERT or Laxmikanth (Polity) books or any other UPSC based books, if you are only preparing for TNPSC Exams. These books are for UPSC (IAS / IPS / IFS / IRS) exams only. Not needed for TNPSC preparations. Some students are now asking, whether there is a need to read these books? Unfortunately, it is hard for us to say that, they are being mis-guided by some UPSC turned TNPSC persons.

இது ஒரு எளிய பதில்,

“TNPSC தேர்வுகளில், சமச்சீர் புத்தகத்திலிருந்து தான் நேரடியாகக் கேள்வி கேட்கப்படுகிறது”

ஏதேனும் சமீபத்திய TNPSC வினாத்தாளை எடுத்து கேள்விகளை பாருங்கள், பெரும்பாலான (கிட்டத்தட்ட எல்லா) பொது அறிவு கேள்விகளும் சமச்சீர் புத்தகங்களிலிருந்து கேட்கப்படுவதை நீங்கள் காணலாம். ஆச்சரியம் என்ன என்றால், TNPSC குரூப் 1 (2015, 2016 மற்றும் 2019) மற்றும் குரூப் 2 (2016, 2018) MAINS (முதன்மை) தேர்வில் கூட கேள்விகள் நேரடியாக SAMACHEER BOOK BACK QUESTIONS இலிருந்து கேட்கப்படுகின்றன. சமச்சீர் புத்தகங்கள் எந்தவொரு தலைப்பையும் பற்றிய ஒட்டுமொத்த பார்வையை உங்களுக்கு வழங்கும். சமச்சீர் (மற்ற Guides – ஐ விட) புத்தகத்தில் ஏன் நேரடியாகச் படிக்க சொல்கிறோம் என்றால், TNPSC syllabus  -ஐ  தலைப்புகளை முழுமையாக படித்து முடிக்க. நீங்கள் TNPSC தேர்வுகளில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அனைத்து சமச்சீர் புத்தகங்களும் PDF இல் இலவசமாகக் கிடைக்கின்றன.

மிக முக்கியமாக, TNPSC பாடத்திட்டம் என்பது சமச்சீர் பாடங்களிலிருந்து மட்டுமே தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த சொற்கள் / தலைப்புகள் என்பதை நீங்களே காணலாம். பாடத்திட்டமே சமச்சீரிடமிருந்து எடுக்கப்பட்டது, மேலும் கேள்விகள் நேரடியாக சமச்சீர் புத்தகங்களிலிருந்து கேட்கப்படுகின்றன. அதற்காவே சமச்சீர் புத்தகங்களைப் படிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பல்வேறு தேர்வுகளின் நமது  Answer Keys -இல் கேள்விகள் சமச்சீர் புத்தகத்தில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டத்திற்கான சான்றுகளை நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்(நமது புத்தகங்களிலும் எந்த எந்த பக்கங்களில் இருந்து கேள்விகள் வந்துருந்தன என்பதையும் காட்டியுள்ளோம்).

ஒரு புத்தகமாக புத்தகக் கடைகளில் கிடைக்கும் புத்தகங்களை நீங்கள் வாங்கி படிக்கும் பொது அதில் பக்கங்கள் குறைவாக இருக்கலாம், இன்னும் சொல்லவேண்டுமென்றால் அது சமச்சீர் புத்தகங்களை விட குறைவான பக்கங்கள் கொண்டதாகவே இருக்கலாம் (நமது TNPSC.Academy இன் சமச்சீர் தொகுப்பு புத்தகம் 6000+ பக்கங்களைக் கொண்டது).

ஆனால் அப்படி ஒரு புத்தகமாவோ, அல்லது கையேடு – ஆகவோ வாங்கியவை முதல் தேர்வு மற்றும் முதன்மை  இரண்டின் அனைத்து பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்காது.

முக்கியமான குறிப்பு:

நீங்கள் TNPSC தேர்வுகளுக்கு மட்டுமே தயாராகி வருகிறீர்கள் என்றால், NCERT அல்லது லக்ஷ்மிகாந்த் (பாலிட்டி) புத்தகங்கள் அல்லது வேறு UPSC அடிப்படையிலான புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த புத்தகங்கள் UPSC (IAS/IPS / IFS /IRS ) தேர்வுகளுக்கு மட்டுமே. TNPSC க்கு தேவையில்லை. இந்த புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று சில மாணவர்கள் இப்போது கேட்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, சில UPSC படித்து விட்டு TNPSC படிக்க வந்த நபர்களால் அது தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு விஷயம்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image