TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC - Aptitude and Reasoning 











www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs March 08, 2018 (08/03/2018)
Download as PDF
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
அனைத்துலக பெண்கள் நாள் 2018
அனைத்துலக பெண்கள் நாள் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இது பெண்களின் சாதனைகள் மற்றும் தடைகள் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்கான குறிக்கோள் ஆகும்.
சர்வதேச மகளிர் தினம் 2018 ம் ஆண்டு ‘Time is Now : கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆர்வலர்கள் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறார்கள்.
இது எவ்வாறு தொடங்கப்பட்டது?
பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.
1910 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் ஆர்வலர் கிளாரா ஜெட்kin கோபன்ஹேகனில் 1910 சர்வதேச மகளிர் மாநாட்டில் மார்ச் மாதத்தில் மகளிர் தினத்தை கொண்டாட யோசனை முன்வைத்தார்.
மார்ச் 19, 1911 அன்று, ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
1975 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்திகளில் நபர்கள், சமீபத்திய நிகழ்வுகள்
வரலாறு படைத்த இந்தியர் : பாலகிருஷ்ணா தோஷிக்கு நோபல் பரிசுக்கு இணையான கட்டிடக்கலை பிரிட்ஸ்கர் விருது
இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலைஞர் பாலகிருஷ்ணா தோஷிக்கு நோபல் பரிசுக்கு இணையான கட்டிடக்கலையில் வழங்கப்படும் ‘பிரிட்ஸ்கர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுக்கு இணையாக பிரிட்ஸ்கர் விருது கருதப்படுகிறது. கட்டிடக்கலையில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பாலகிருஷ்ணா(வயது90) என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இந்த விருதை உலகின் சிறந்த கலைஞர்களான ஜாகா ஹாதித், பிராங்க் ஜெஹ்ரி, ஐஎம் பீ, ஷெங்கரு பான் ஆகியோர் பெற்றுள்ளனர்.
மும்பையில் உள்ள ஜே.ஜே ஸ்கூல் ஆப் கட்டிடக்கலை கல்லூரியில் பாலகிருஷ்ணா பயின்றவர்.
பிரிட்ஸ்கர் விருது பற்றி:
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.
கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே.
இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, “கட்டடக்கலையின் நோபல் பரிசு” எனக் குறிப்பிடப்படுவதுண்டு.
இந்த விருது $ 100,000 (அமெரிக்க) மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை கொண்டுள்ளது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்திகளில் நபர்கள், சமீபத்திய நிகழ்வுகள்
Nari Shakti Puraskars – மகளிர் சக்தி விருதுகள்
சர்வ தேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி புரஸ்கர்ஸ் 2016 – மகளிர் சக்தி விருதுகள் ஜனாதிபதி மூலம் வழங்கப்படும்.
Nari Shakti Puraskars பற்றி:
பெண்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு Nari Shakti Puraskars விருதுகள் 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையிலுள்ள பெண்களின் முயற்சியால் பல்வேறு சேவைகளில் பெண்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் பொருட்டு Nari Shakti Puraskars விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்தபெண்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் முறைகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேசிய அளவில் இந்த விருதுகளை அறிவிக்கிறது.
Nari Shakti Puraskarsல் ரூ .1 லட்சம் ரொக்கம், விருது மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சான்றிதழ் போன்றவற்றை கொண்டிருக்கும்.
தமிழ்நாட்டில் இருந்து விருது பெற்றவர்கள்:
Ms.Anuradha கிருஷ்ணமூர்த்தி மற்றும் Ms.Namrata சுந்தரேஷன்:
அனுராதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சென்னை நாமாதா சுந்தரேஷன் ஆகியோர் Kase என்றழைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இது 20 வகையான தனித்துவமான பாலாடைக்கட்டியை தயாரிக்கிறது.
Kase என்பது ஒரு சமூக நிறுவனம் மற்றும் ஊனமுற்ற பெண்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பெண்கள் இருவரும் தனி பின்னணியில் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊனமுற்ற மக்களுக்கு பயிற்சி அளிக்கிற வகையில், BPO வினை உருவாக்கியுள்ளார்.
சர்வதேச முதலீட்டிற்கான மூலோபாய ஆலோசனை நிறுவனத்தை நிறுவியவர் நர்மதா சுந்தரேஸன் ஆவார். மிக குறுகிய காலத்தில் KASE மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்த பாலாடைக்கட்டியானது, மிகவும் இயற்கையான வழியில் எந்தவொரு இரசாயன பொருள்களும் இல்லாமல் பதனச்சரக்கு எதுவும் உபயோகிக்காமல் இயற்கையான புல்களை உண்ட பசுக்களின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஷீலா பாலாஜி:
1960 க்கும் இப்பொழுது வரையிலும் 1,10,000 லட்சம் அரிசி வகைகளில், ஒரு சில ஆயிரம் அரிசி வகைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
NGO AIM for For Seva இன் தலைவராகவும், நிர்வாக இயக்குனருக்காகவும் உள்ள ஷீலாபாலஜி என்பவர் இந்த வகையை மீண்டும் கொண்டு வர விரும்பினார்.
எனவே, இந்த இழந்த வகைகளை மீண்டும் வளர்த்தது மட்டுமல்லாமல், மக்கள் அவற்றை சுவைத்து, விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு முறை வளர்ப்பதை ஊக்குவிப்பதையும் செய்தார்.
பழைய நெல் வகைகள் அடங்கிய பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பீடுகளை ஷீலா ஆராய்ச்சி செய்ததுடன், என்.ஜி.ஓ.விற்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் அவற்றை வளர்த்து வந்தார்.
2013 ஆம் ஆண்டில் மஞ்சுகுடி கிராமத்தில் தானியங்கள் பற்றிய விழாவைத் தொடங்கினார். அவர் நான்கு வகையான அரிசியை வைத்து பாதுகாக்க ஆரம்பித்த அவர் நான்கு ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 30 வகைகளை பாதுகாத்துள்ளார்.
NGO AIM for For Seva இலவச கல்வியில் மிகப்பெரிய NOG களில் ஒன்றாகும். இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் 100 க்கும் மேற்பட்ட இலவச மாணவர் விடுதிகள் உள்ளன.
அங்கு புத்தகங்கள், சீருடைகள், பள்ளி கட்டணம் மற்றும் பல இலவசமாக கொடுக்கப்படுகின்றன.
கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கு மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்குவதிலும், இயற்கை பேரழிவுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதிலும் ஈடுபட்டுள்ளார்.
_
தலைப்பு : விண்வெளி பற்றிய விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள்
பார்கர் சூரிய ஆய்வுகலன்
உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளுடன் முன்னணியில் இருப்பது நாசா.
தற்போது முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்வதற்கு ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை வரும் ஜூலை/ஆகஸ்டில் அனுப்ப உள்ளது.
இது சூரியனைப் பற்றிய விஞ்ஞானிகளின் 60 ஆண்டு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, அனுப்பப்படுகிறது.
விண்கலத்தில் ஒரு ‘மைக்ரோ சிப் மெமரி’ இடம் பெற்றிருக்கும். உலகளவில் மக்கள் அனுப்பும் பெயர்கள் இதில் பதிவு செய்யப்பட இருக்கிறது. இதற்கு நாசா அனைவரையும் அழைத்திருக்கிறது.
இதன் பணி:
இந்த விண்கலம் வரும் ஜூலை 31 – ஆக., 19க்குள், புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும்.
2024ல் சூரியனின் வளிமண்டலத்தை சென்றடையும்.
விண்கலத்தின் எடை 612 கிலோ நீளம்: 9 அடி 10 இன்ச்
சூரியன் – பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ.
இது 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து, 59.5 லட்சம் கி.மீ., துாரத்தில் நின்று ஆய்வில் ஈடுபடும். இதுவரை எந்த விண்கலமும், இந்த துாரத்தை எட்டியதில்லை.
சூரியனின் வெப்பத்தில் இருந்து, விண்கலத்தை பாதுகாக்கும் விதமாக கார்பனால் ஆன தெர்மல் கவசம் (8 அடி விட்டம், 4.5 இன்ச் தடிமன்) பொருத்தப்பட்டுள்ளது.
இது ஒரு சிறிய கார் வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விண்கலம், பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களையும் ஆய்வுக்காக சுமந்து செல்லும்.
இது மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும்.
அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://go.nasa.gov/HotTicket என்ற தளத்தில் வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நாசா கேட்டுக் கொண்டுள்ளது.
_
தலைப்பு : இந்திய கலாச்சார நிகழ்வுகள்
Know India Programme (KIP)
ஒன்பது நாடுகளில் இருந்து நாற்பது இந்திய மாணவர்கள் இந்தியாவிற்கு Know India Programme (KIP)ன் 46 வது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர்.
இந்த பதிப்பிற்கான ஏற்பாடுகளை மத்தியப்பிரதேசம் செய்துள்ளது.
Know India Programme (KIP) பற்றி:
Know India Programme (KIP) திட்டம் என்பது இந்திய வம்சாவளி இளைஞர்கள் (18-30 ஆண்டுகளுக்கு இடைபட்டவர்கள்) நமது கலாச்சாரத்தில் ஈடுபடுவதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு முக்கிய திட்டமாகும்.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், கலை மற்றும் சமகால இந்தியாவின் பல்வேறு அம்சங்களுடன் அவற்றை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவுகிறது.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
தேசிய பாதுகாப்பு தினம் 2018
மார்ச் 4ம் தேதி 46வது தேசிய பாதுகாப்பு தினத்தின் போது, பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தணிக்கை மற்றும் பல்வேறு போட்டிகளின் விழிப்புணர்வை பரப்புவதற்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.
_
தலைப்பு : சர்வதேச நிறுவனங்கள், பெண்கள் மேம்பாடு, சமீபத்திய நாட்குறிப்புகள்
உலகின் பணக்காரர்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் எட்டு இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்
ஃபோர்ப்ஸ் ‘2018’ உலகின் பில்லியனர்கள் பட்டியலில் உலகின் செல்வந்தர்களில் 256 பெண்களில் எட்டு இந்திய பெண்களும் அடங்குவர்.
இந்திய பெண்களிடையே, சாவித்ரி ஜிண்டால் 8.8 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகிலேயே 176 வது இடத்தில் உள்ளார்.
Biocon தலைவர் Kiran Mazumdar-Shaw இரண்டாவது பணக்கார பெண்ணாக உள்ளார். இவர் 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடைய இந்திய நாட்டின் பணக்கார பெண்மணி ஆவார்.
ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ் மற்றும் லீனா திவாரி ஆகியோர் இப்பட்டியலில் அடங்குவர்.
தெர்மாஸின் அனு அகா பட்டியலுக்குத் திரும்ப இடம்பெற்றுள்ளார் மற்றும் 1.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புள்ள ஆறாவது பணக்காரராக உள்ளார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
ஒரு பாட்டில் உலகின் பழமையான செய்தியுடன் கிடைத்தது
மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உலகின் பழமையான செய்தி கொண்ட ஒரு பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் வெட்ஜ் தீவு அருகே குகைகளில் 132 வயதான பாட்டினை டான்யா இல்லமான் கண்டுபிடித்தார்.
பாட்டில் உள்ளே, 12 ஜூன் 1886 தேதியிட்ட ஜேர்மனியில் அச்சிடப்பட்ட ஒரு ரோல் காகிதத்தைக் கண்டுபிடித்து மேற்கத்திய ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
–
தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்தி நபர்கள்
ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்
மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது.
அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூச்சிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற உயரிய விருதினை வழங்கியது.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அந்த விருதினை ரத்து செய்வதாக அருங்காட்சியகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மரில் ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையின்போது, ஆங் சான் சூச்சி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்தமைக்காகவே விருதினை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூச்சியின் தேசிய லீக் ஜனநாயகக் கட்சி, இந்த இனப்படுகொலையைக் கண்டிக்கத் தவறியது, தடுக்கத் தவறியதோடு ஐ.நா., விசாரணைக் குழுவினருக்கும் ஒத்துழைப்பும் அளிக்கவில்லை எனவும் விருதை ரத்து செய்தது தொடர்பாக அருங்காட்சியம் விளக்கியுள்ளது.
அதேபோல், ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பதிவு செய்யவந்த பத்திரிகையாளர்கள் மீதும் அடக்குமுறையை ஏவிவிட்டதாக ஆங் சான் சூச்சி மீது அந்த அருங்காட்சியகம் குற்றஞ்சாட்டியுள்ளது.