• 1

    Subtotal: ₹500.00

    View basketCheckout

TNPSC Tamil Current Affairs April 18, 2018

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs April 18, 2018 (18/04/2018)

 

Download as PDF

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

உலக பாரம்பரிய நாள்

ஒவ்வொரு ஆண்டும், 18 ஏப்ரல் அன்று உலக பாரம்பரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

2018ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “தலைமுறைக்கான பாரம்பரியம்”.

உலக பாரம்பரிய தளம் என்றால் என்ன?

ஒரு உலக பாரம்பரிய தளம் என்பது, ஒரு இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பகுதி அல்லது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சிறப்பு பாதுகாப்பு தேவைப்படும் இடம் என பலவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தளங்கள் ஐ.நா. மற்றும் ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது யுனெஸ்கோ எனவும் அழைக்கப்படுகிறது.

உலக பாரம்பரியமாக வகைப்படுத்தப்படும் தளங்கள் மனிதகுலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக யுனெஸ்கோ நம்புகிறது, அவை கலாச்சார மற்றும் உடல்ரீதியான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

முக்கிய குறிப்புகள்:

2018 ஆம் ஆண்டு வரை இந்தியா 36 உலக பாரம்பரிய சின்னங்களை கொண்டுள்ளது. இத்தாலி 53 தளங்கள் மற்றும் சீனா 52 தளங்களைக் கொண்டுள்ளன.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், பொது நிர்வாகம்

அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள்

புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டு சிறார்கள் ஒவ்வொருவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் நித்தி ஆயோகின் அட்டல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ் அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்காவது தொழில் புரட்சி யுகத்தில் முக்கியமான திறமைகளை உருவாக்குவதற்கும் மாற்றியளிப்பதற்கும் உதவியாக நவீனத் தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ள ஏடிஎல்எஸ் சிறார்களிடம் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்முனையும் உணர்வையும் மேம்படுத்தும் அமைப்புகளாகத் தற்போது உள்ளன.

ஏடிஎல் (ATL) என்றால் என்ன?

ஏடிஎல் சமூக தினம் என்பது இந்தச் சோதனைக் கூடங்களுக்குப் பக்கத்தில் உள்ள மக்களை வரவழைத்து  வியப்பளிக்கும் புதிய அறிவியல் உலகம் மற்றும் எதிர்க்காலத் தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர்களிடம் விழிப்புணர்வைப் பரவச்செய்யும் முயற்சியாகும்.

ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை மையமாகக் கொண்டு ஏப்ரல் 13-16 தேதிகளில் இந்தியா முழுவதும் வருடாந்தரச் சமூக தினம்  கொண்டாடப்படுகிறது.

அட்டல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை நிறுவ 2017-இல் 2,400 க்கும் அதிகமான பள்ளிகளைத் தெரிவு செய்திருந்தது.

அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்களுக்குச் சமூக தினம் கொண்டாடப்பட்டபோது 30,000 வரையிலான புதிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதன் படைப்பாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புச் சூழலை உருவாக்கும் தன்மை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேலும் கூடுதலாக இதுபோன்ற இளைய மாணவக் கண்டுபிடிப்பாளர்களை ஏடிஎல்எஸ் உருவாக்கும் ஏடிஎல் சமூக தினம் போன்ற முன்முயற்சிகள் தாக்கத்தை விரிவாக்குவது மட்டுமன்றி சமூக அளவில் மாற்றத்திற்கான முயற்சிக்கு வளங்களாகவும் விளங்கும்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.