• No products in the basket.

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil April 06, 2019

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil April 06, 2019 (06/04/2019)

 

Download as PDF

தலைப்பு: விண்வெளி பற்றிய விழிப்புணர்வு, சர்வதேச நிகழ்வுகள்

Hayabusa2

ஜப்பானின் விண்கலம் ஹயபுசா 2 சமீபத்தில் ஒரு உடுக்கோள் மீது வெடி வைத்து ஒரு சிதைவை உண்டு பண்ணியது. உடுக்கோளில் ஒரு பள்ளம் உருவாக செய்வதே இதன் நோக்கமாக உள்ளது.

மேலும், இந்த விண்கலம் அதன் நிலத்தடி மாதிரிகள் சூரிய மண்டலத்தின் தோற்றத்திற்கு சாத்தியமான துப்புகளைக் கண்டுபிடிக்கும். குறிப்பிடத்தக்க வகையில், ஹயபுசா 2 என்பது ஒரு ஜப்பானிய விண்கலத்தில், 2005 இல் விண்ணில் எய்தப்பட்ட ஹையபுசாவின் இரண்டாவது பதிப்பாகும்.

_

தலைப்பு: சமீபத்திய நிகழ்வுகள், செய்திகள் பிரபலமான நபர்கள்

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். சிலம்பொலி, சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைப் படைத்த சிலம்பொலி செல்லப்பன் ம.பொ.சிக்கு அடுத்து சிலப்பதிகாரத்தை பட்டிதொட்டியெங்கும் கடந்த 60 ஆண்டு காலமாகப் பரப்பினார்.

தமிழ் வளர்ச்சி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர்-இயக்குனர் ஆவார். தமிழ் அறிஞரான ஆர்.பீ.சேதுப்பிள்ளை அவர்கள் சிலம்பொலி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

அவரது புகழ்பெற்ற சில நூல்கள்:

சிலம்பொலி, சிலப்பதிகார சிந்தனைகள், சங்க இலக்கிய தேன்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.