• 1

    Subtotal: ₹500.00

    View basketCheckout

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil April 01, 2019

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil April 01, 2019 (01/04/2019)

 

Download as PDF

தலைப்பு: இந்திய வெளியுறவு கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்

சர்வதேச சூரிய ஒப்பந்தம்

சர்வதேச சூரிய ஒற்றுமை குறித்த கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சர்வதேச சூரிய ஒப்பந்தத்தில் பொலிவியா இணைந்துள்ளது.

இதன் பின்னணி:

2016 நவம்பர் 15 ம் தேதி மராகேக்கில் COP22 இல் கையொப்பமிட வேண்டும் என்பதற்காக சர்வதேச சூரிய ஒற்றுமை ஒப்பந்தம் அனைத்து நாடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்து இருந்தது.

இதில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட், யு.கே, ஜப்பான் ஆகிய நாடுகளாகும்.

ISA பற்றி:

சர்வதேச சூரிய ஒத்துழைப்பு (ISA) என்பது இந்தியாவால் தொடங்கப்பட்ட 122 க்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டாகும், அவைகளில் பெரும்பாலான நாடுகள் சூரிய ஒளி நாடுகளாகும், அதாவது முற்றிலும் அல்லது ஓரளவிற்கு கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. மேலும் இப்பொழுது ஐ.நாவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் பிரகடனம் சர்வதேச சூரிய ஒத்துழைப்பினை (ஐ.எஸ்.ஏ) அதன் உறுப்பு நாடுகளில் சூரிய ஆற்றலை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணித்த ஒரு கூட்டணியாக உள்ளது.

இதன் நோக்கங்கள்:

ஐ.எஸ்.ஏவின் பிரதான குறிக்கோள்கள், 1,000 GW சூரிய சக்தி உற்பத்தி திறன் மற்றும் 2030 ஆம் ஆண்டில் சூரிய சக்திக்கு 1000 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை அணிதிரட்டுதல் ஆகியவை ஆகும்.

எப்போது நடைமுறைக்கு வந்தது?

டிசம்பர் 6, 2017 இல் ISA கட்டமைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, ISA முறையானது இந்தியாவின் Gurugram இல் தலைமையிடமாகக் கொண்டு சட்டப்படி ஒப்பந்த அடிப்படையிலான சர்வதேச அரசாங்க அமைப்பு ஆனது.

_

தலைப்பு: இந்திய வெளியுறவு கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்

கினியா குடியரசின் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்தார்

கினியாவின் பிரதம மந்திரி டாக்டர் இப்ராஹிமா கசோரி ஃபோபானா புது டெல்லியில் வந்தடைந்து இந்தியா மற்றும் கினியாவிற்கான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்தை சந்தித்தார்.

முக்கிய குறிப்புகள்:

கினியா மற்றும் இந்தியா-கினியா இருதரப்பு உறவுகளை இந்தியா 2017-18ல் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கொண்டுள்ளது.

_

தலைப்பு: சர்வதேச நிகழ்வுகள்

இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா 7 நாட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்தது

இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் 7 நாடுகளின் இராணுவப் பயிற்சியை ஆஸ்திரேலியா இந்தியப் பெருங்கடலில் நடத்துகிறது.

ஆஸ்திரேலியா 4 கடற்படை கப்பல்களையும் ஒரு இராணுவ விமானத்தையும் அனுப்பி 1000 பாதுகாப்பு படையினரையும் இதில் பங்கெடுக்க வைத்து இதனை மிகப்பெரிய பயிற்சியாக மாற்றியது.

இப்பயிற்சியானது, இந்திய பெருங்கடலில் வளர்ந்து வரும் சீன செல்வாக்கை எதிர்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

_

தலைப்பு: புதிய நியமனங்கள், பிரபலமான நபர்கள், சர்வதேச நிகழ்வுகள்

ஸ்லோவாக் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜூசானா கபூடோவா 58.4% வாக்குகளை பெற்றதன் மூலம் ஸ்லோவாக்கியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஜனாதிபதியாக ஆனார். அதன் ஆளும் கட்சி போட்டியாளர், யூரோ எரிசக்தி ஆணையர் மார்ஸ் செஃபோகோவிக் 41.6% வாக்குகள் பெற்றிருந்தார்.

அவரைப் பற்றி:

வழக்கறிஞரான இவர், 45 வயதில் ஸ்லோவாக்கியா வரலாற்றில் இளைய தலைவராக பணியாற்றும் செக்யூட்டோவா ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாக இவர் இருப்பார்.

வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான சுசனா அரசியல் பின்புலம் இல்லாதவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியில் இணைந்தார்.

_

தலைப்பு: விண்வெளி பற்றிய விழிப்புணர்வு, புதிய குறிப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள்

‘எமிசாட்’ உள்பட 28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்

பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) எமிசாட் செயற்கைக் கோள், பிறநாடுகளின் 28 சிறிய செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு, பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவண் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விமானம் PSLV-QL இன் முதல் பணியைக் குறிக்கிறது, பிஎஸ்எல்வி ஒரு புதிய மாறுபாடு நான்கு ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்கள் கொண்டது.

ISROன் மினி சேட்டிலைட்-2 பஸ் சுமார் 436 கிலோ எடையுள்ள ஒரு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் மின்காந்த நிறமாலை அளவீடுக்காக பயன்படுகிறது.

இந்த ராக்கெட்டுடன் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும்,  லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக் கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக் கோளும், டிஆர்டிஓ சார்பில் எமிசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட்டது.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.