• No products in the basket.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம்

TNUSRB - Police Constable - இந்திய ஆட்சி அமைப்பு இலவச ONLINE வகுப்புகள் - இந்திய அரசியல் அமைப்பு சட்டம்

[vc_row][vc_column][vc_column_text]

அரசியலமைப்பு சட்டம் என்பது அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடைய தொகுப்பாகும். இதன் அடிப்படையிலேயே நாட்டு மக்கள் ஆளப்படுகிறார்கள்.

 

இந்திய அரசியல் அமைப்பு சட்டம்:

அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைப்படி, நம் இந்திய நாட்டிற்கான புதிய அரசியலமைப்பினை உருவாக்க இந்திய பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் நிர்ணய சபை 1946 ஆண்டில் அமைக்கப்பட்டது.

அரசியல் வரைவுக்குழு:

  • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (குழுத் தலைவர்)
  • என். கொபால்சுவாமி அய்யங்கார்
  • அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
  • டாக்டர் கே.எம். முன்ஷி
  • சையத் முகமது சாதுல்லா
  • பி.எல். மித்ரா(என். மாதவராவ்)
  • டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டி.பி.கைத்தான்)

இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் :

  • உலகின் மிக நீளமான அரசியலமைப்பு.
  • நாடாளுமன்ற முறை அரசாங்கம்.
  • இறையாண்மை/இறைமை வாய்ந்த அரசு
  • மக்களாட்சி நாடு
  • நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்வுடைய தன்மையின் கலப்பு
  • கூட்டாட்சி போல்வு
  • அடிப்படை உரிமைகள்
  • அடிப்படைக் கடமைகள்
  • அரசு நெறிமுறைக் கோட்பாடு
  • சுதந்திரமான நீதித்துறை
  • சமயச் சார்பற்ற அரசு/மதசார்ப்பின்மை
  • வயது வந்தோர் வாக்குரிமை
  • ஒற்றைக் குடியுரிமை

[/vc_column_text][vc_column_text]பிற நாடுகளிலிருந்து பெறப்பட்டவைகள்:

 

நாடுகள்
பெறப்பட்டவை
இங்கிலாந்து
நாடாளுமன்ற முறை அரசாங்கம், சட்டம் இயற்றும் முறை, கூட்டுப் பொறுப்பு, ஒற்றை குடியுரிமை
அமெரிக்கா
முகவுரை, அடிப்படை உரிமைகள், நீதி மறு ஆய்வு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி நீக்கம்.
கனடா
கூட்டாச்சி தத்துவம், வலிமையான மத்திய அரசு.
அயர்லாந்து
அரசு நேரிமுரையுருத்தும் கோட்பாடுகள், குடியரசுத் தலைவர் தேர்தல் முறை, மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள்.
ஜெர்மனி
நெருக்கடி காலநிலை மற்றும் இதனால் அடிப்படை உரிமைகள் மீது ஏற்படும் தாக்கம்
ஆஸ்திரேலியா
பொதுப் பட்டியல், வணிக வியாபாரம் தொடர்பான வகைமுறைகள்
இரஷ்யா
அடிப்படைக் கடமைகள்
தென் ஆப்பிரிக்கா
அரசியலமைப்புச் சட்டத்திருத்த முறை
பிரான்ஸ்
குடியரசு அரசாங்கம்

 

குழுக்கள்:

குழுக்கள்
குழுத் தலைவர்கள்
அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுப்பான்மையினர் குழு
வல்லபாய் பட்டேல்
மாகாண அரசியலமைப்பு குழு
வல்லபாய் பட்டேல்
மத்திய அதிகார குழு
ஜவஹர்லால் நேரு
மத்திய அரசியலமைப்பு குழு
ஜவஹர்லால் நேரு
கொடிக் குழு
ஜே.பி. கிருபளானி
நெறிமுறைக் குழு
கே.எம். முன்ஷி
நடைமுறை விதிக் குழு
இராஜேந்திர பிரசாத்

[/vc_column_text][/vc_column][/vc_row]

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.