fbpx
  • No products in the basket.

9.4. ரா.பி.சேதுப்பிள்ளை

· திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரத்தில் 1896-ல் பிறந்தார்.

· சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார்.

· சில ஆண்டுகள் நெல்லையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துள்ளார்.

· பல வார, மாத இதழ்கள் இவர்தம் கட்டுரைகளை விரும்பி வெளியிட்டன.

· அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

· அதன் பிறகு சென்னைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அதன் முதல் தமிழ்ப் பேராசிரியரும் இவரே.

· திருநெல்வேலி மகப்பேறு மருத்துவனைக்கு தமது பொருள் அனைத்தையும் நல்கினார்.

· தம் அன்னையின் பெயரால் “சொர்ணாம்பாள் அறக்கட்டளை”-யை சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறுவினார்.


இவரது நூல்கள்

· வீரமாநகர்

· வேலும் வில்லும்

· தமிழ்நாட்டு நவமணிகள்

· சிலப்பதிகார விளக்கம்

· செந்தமிழும் கொடுந்தமிழும்

· கால்டுவெல் ஐயர் சரிதம்

· திருவள்ளுவர் நூல்நயம்

· ஊரும் பேரும்

· தமிழின்பம் (சாகித்திய அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் நூல் இதுவே)

· இவரது பதிப்புகள் திருக்குறள் எல்லீஸ் உரை, பாரதி இசைத்திரட்டு என்பனவாகும்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image