fbpx
  • No products in the basket.

8.5. காளமேகப்புலவர்

கார்மேகம் போல பாடல்களைப் பொழியும் திறமை பெற்றதால் இப்பெயர் பெற்றார்.

இயற்பெயர் வரதன். (காலம் 15ம் நூற்றாண்டு)

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக்கிராமத்தில் பிறந்தவர் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் ஊரில் பிறந்தார் என்றும் கூறுவர்.

திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆவார்.

இவர் பாடல்களில் இருபொருள்கள் அமைவதுடன், நகைச்சுவையும் அமைந்திருக்கும்.

ஆசுக்கவி பாடுவதில் சிறந்து விளங்கியமையால் “ஆசுக்கவியால் அகிலம் எங்கும் வீசுபுகழ் காளமேகம்” என்றும், வசைப்பாடும் வல்லமையால் “வசைப்பாட காளமேகம்” என்றும் புகழப்பட்டார்.

திருவானைக்கா உலா, சித்திர மடல் என்பன இவரது வேறு படைப்புகள் ஆகும்.


சிறப்பு பெயர்:

· வசை பாட காளமேகம்

· வசைகவி

· ஆசுகவி


படைப்புகள்:

· திருவானைக்கா உலா

· திருவானைக்கா சரஸ்வதி மாலை

· சமுத்திரவிலாசம்

· சித்திரமடல்

· பரப்பிரம்ம விளக்கம்

· வினோத ரசமஞ்சரி

· தமிழ் நாவலர் சரிதை

· புலவர் புராணம்

· தனிச்செய்யுள் சிந்தாமணி

· பெருந்தொகை

· கடல் விலாசம்


சிறப்பு:

சிலேடை, வசைப் பாடுவதில் வல்லவர்


குறிப்பு:

· இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.

· திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.

· திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்

· வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.

· இவர் மறைந்த இடம் = திருவானைக்கா

· திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image