TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












நூல் குறிப்பு:
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.இரண்டு பொருள்பட மொழிதலால் இரட்டுறமொழிதல் என கூறப்பட்டது.இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர்.
ஆசிரியர் குறிப்பு :
ஆசிரியர் – காளமேகப்புலவர் (15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார்)இயற்பெயர் – வரதன்ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவர் ஒரு ஆசு கவி ஆவார்.இயற்றிய நூல்கள் :திருவானைக்கா உலாசரஸ்வதி மாலைபரப்பிரம்ம விளக்கம்சித்திர மடல்
விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
ஆழிக்கு இணை
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு
– தனிப்பாடல் திரட்டு
பாடலின் பொருள்
தமிழ்:தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
கடல் :கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.
தெரிந்து தெளிவோம்
இரட்டுற மொழிதல்
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூன்று வகையான சங்குகள்
தருதல்
மிகுதியான வணிகக்
கப்பல்கள்
நீரலையைத் தடுத்து நிறுத்தி,
சங்கினைக் காத்தல்