fbpx
  • No products in the basket.

8.3. குயில் பாட்டு

உலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் செவ்வியல் இசைமட்டுமன்று, ஏட்டில் எழுதப்படாமலும் கருவிகளால் இசைக்கப்படாமலும் காற்று முழுவதும் கலந்திருப்பதும் இசைதான்.

வாய்மொழி இலக்கியமாய் மக்கள் இலக்கியமாய்ப் பரவிக் கிடக்கும் இசைத்தமிழ், தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது உண்டு.

அந்த இசையின் உருவகமாக நாம் கொள்ளுவது குயில்.

குயில்பாட்டு என்ற பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.

குயில் பாட்டு பாரதியாரின் மற்றொரு புகழ் பெற்ற நூலாகும்.

இந்நூலில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் அனைத்து பிரிவினர்களுக்கும் காதல் உரியது முதலிய கருத்துக்களை கூறுகிறது.மாந்தோப்பில் குயில் ஒன்று பாட அக்குயிலின் கீதத்தில் கவிஞன் ஒருவன் காதல் கொள்கிறான்.அவன் மீது அந்த குயிலும் காதல் கொள்கிறது.அக்குயில் அவனை நான்காம் நாள் மாந்தோப்பிற்கு வரச்சொல்ல, அவனும் வருகிறான்.அக்குயில் முதலில் குரங்கிடமும், மாட்டிடமும் காதல் சொல்லி அனுப்ப, அந்தக்கவிஞன் கோபம் கொண்டு குயிலுடன் பேசுகிறான்.அதுசமயம் குயில் தனது முற்பிறவிக் கதையை கண்ணீருடன் சொல்கிறது.கவிஞன் மனமுருகி குயிலைத் தீண்ட அக்குயில் அழகு நிறைந்த பெண்ணாக மாறி கவிஞனை அடைகிறது.

குயில் பாடும் பாடல்கள் 3 அடிகளைக் கொண்ட 9 சந்தப்பாடல்களாகக் குறிப்பிடப்படுகிறது.


மேற்கோள்கள்:-

“காதல் காதல் காதல்

காதல் போயிற், காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்”

“காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே

நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர் மணிபோல்” இந்நூலின் சில வரிகள்… … …

குயில் பாட்டில் உள்ளம் பறிகொடுத்த பாரதிதாசன், தனது இலக்கிய இதழுக்கு குயில் என்றே பெயரிட்டார்.

‘நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”


ஆசிரியர் குறிப்பு:-

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

தேசியகவி என்றும் மகாகவி என்றும் போற்றப்பட்டவர்.

இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச் செய்தவர்.

பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

இவருடைய வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத்தக்கவை.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image