fbpx
  • No products in the basket.

8.2. பாஞ்சாலி சபதம்

· இது வடமொழியில் வேதவியாசர் இயற்றிய பாரதத்தை தழுவி இயற்றப்பட்டது.

· மொத்த பாடல்கள் 412, வரிகள் 1398 (பிரமதுதி, சரஸ்வதி துதி உள்ளிட)

· சருக்கம் – 5

· முதல் பாகம்  – துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

· முதல் பாகம் - சூதாட்டச் சருக்கம்

· இரண்டாம் பாகம் - அடிமைச் சருக்கம்

· இரண்டாம் பாகம் - துகில் உரிதல் சருக்கம்

· இரண்டாம் பாகம் - சபதச் சருக்கம்

· பாவகை விருத்தப்பா

· ஆசிரியர் பாரதியார்.

· பஞ்சபாண்டவர்கள் என்பர்கள், தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் (இந்தியர்).

· பாஞ்சாலின் மற்றொரு பெயர் திரௌபதி.

· அத்தினாபுரத்தின் மன்னன் திருதராட்டிரன் (கண்கள் இல்லாதவன்).

· திருதராட்டிரன் மகன் துரியோதனன். (துரியோதனன் அந்நிய தீயசக்திகள்)

· துரியோதனனின் தாய்மாமன் சகுனி. (சகுனி அந்நிய தீயசக்திகளின் சூழ்ச்சி எண்ணங்கள்)

· துரியோதனன் விதுரன் மூலமாக பஞ்சபாண்டவர்களை விருந்திற்கு அழைத்தான்.

· தருமன் சூதாட்டத்தில் முதலில் தன்னையும், பிறகு சகோதரர்கள் சகாதேவன், நகுலன், அர்ச்சுனன், பீமன் மற்றும் இறுதியாக மனைவி பாஞ்சாலியையும் பணயமாக வைக்கிறான்.

· பாஞ்சாலியை இழுத்து வந்து துகில் உரிந்தவன் துச்சாதனன்.

· பாஞ்சாலியின் மானம் காத்தவன் கண்ணன்.

· துச்சாதனனைக் கொல்வேன் என சபதம் செய்பவன் பீமன்.

· கர்ணனைக் கொல்வேன் எனச் சபதம் செய்பவன் அர்ச்சுனன்.

· பாஞ்சாலி - துச்சாதனன், துரியோதனன் என இருவரது இரத்தத்தையும் தலையில் பூசுவேன் என சபதம் செய்தாள்.

· துச்சாதனனால் பாஞ்சாலி துகிலுரியப்படுதல் என்பது அந்நிய தீயசக்திகளால் நம் நாட்டு வளங்கள் உறிஞ்சப்படுதல், நம் மண்ணின் மைந்தர்கள் அடிமைப்பட்டு அவமானப்படுதல்.

· திருதராட்டிரனின் பார்வையற்ற நிலை என்பது தன் தாய்நாடு அடிமைப்பட்டிருந்தும் விதிபோல் தான் நடக்கும் என்றிருக்கும் மக்களின் குருட்டு மனப்பான்மை.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image