fbpx
  • No products in the basket.

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் என்றால்,

i) கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் உயிரெழுத்தில் தொடங்கும் சொல் இருப்பின் அதனை முதலில் எழுத வேன்டும். (அ முதல் ஒள வரை)

எ. கா

வினா : அன்னம், ஊன், ஆடு, ஈகை

விடை : அன்னம், ஆடு, ஈகை, ஊன்

ii) கொடுக்கப்பட்டுள்ள சொற்களில், உயிர்மெய் சொற்களை முதல் எழுத்தாக கொண்ட சொற்கள் இருப்பின், அதனை க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ற, ன என்ற உயிர்மெய் எழுத்துக்களின் வரிசைபடி வரிசை படுத்த வேண்டும்.

எ. கா

வினா : கண், மண், நகம், சட்டை

விடை : கண், சட்டை, நகம், மண்

iii) கொடுக்கப்பட்டுள்ள சொற்களில், ஒரே உயிர்மெய் எழுத்து கொண்ட பல சொற்கள் வந்திருந்தால், அதனை

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என்ற முறையில் வரிசைப்படுத்த வேண்டும்.

எ. கா

மேலும் சில எ.கா

வினா:தண்ணீர், தாவரம், தேர், திங்கள், தென்னை

விடை:தண்ணீர், தாவரம், திங்கள், தென்னை, தேர்

வினா:பெறு, பூத்தல், பொறு, பேறு, பீலி, பைங்கூழ்

விடை:பீலி, பூத்தல், பெறு, பேறு, பைங்கூழ், பொறு

வினா:அற்றம், அங்கை, அர்ப்பணி, அட்டை, அச்சம், அவ்வவை

விடை:அங்கை, அச்சம், அட்டை, அர்ப்பணி, அவ்வவை, அற்றம்

வினா:ஏடகம், அறிவு, இருள், ஊண், உடுக்கை, உடம்பு, அற்றம்

விடை:அற்றம், அறிவு, இருள், உடம்பு, உடுக்கை, ஊண், ஏடகம்

வினா: முகில், மேகம், மண், மாலை

விடை: மண், மாலை, முகில், மேகம்

வினா: மாற்றம், தாய்மொழி, உரிமை, கடமை, வன்மை

விடை: உரிமை, கடமை, வன்மை, தாய்மொழி, மாற்றம்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image