fbpx
  • No products in the basket.

7.9. இராசராசன் உலா

பாட்டுடைத் தலைவன்

இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய மகனே இராசராசசோழன் ஆவான். இவனே இவ்வுலாவின் தலைவன். தக்கயாகப் பரணி உருவாகக் காரணம் ஆனவனும் இவனே. இவன் கி.பி. 1146-இல் அரசு கட்டில் ஏறியுள்ளான். இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் உண்டு. சோழேந்திர சிம்மன், கண்டன், இராச கம்பீரன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன.

இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது. இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது.

இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச சோழன் உலா கூறுகின்றது. இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்றுள்ளான்.

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். இராசராச சோழன் உலாவில் வரும்


“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ

வழியிட்ட வாள் காண வாரீர்”

என்ற வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது.

இரண்டாம் இராஜராஜ சோழன் தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூட்டி விட்டு மரணம் அடைந்தான்.

இலக்கியச் சிறப்புகள்

இராசராசசோழன் உலாவும் அமைப்பு வகையில் இரு பிரிவாக உள்ளது.

1) பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பற்றிய செய்திகள் முதலில் கூறப்படுகின்றன.

2) தலைவன் உலாப் போகும் காலத்தில் ஏழு பருவ மகளிரின் காதல் செயல்கள் அடுத்து இடம் பெறுகின்றன.


நூலாசிரியர்

இந்நூலை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். கவிச் சக்கரவர்த்தி என்ற தொடர் கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது. (ஏ. ஆர் எண். 109, 110 & 1027, 8). ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் மீது பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார். அரிசில் ஆற்றங்கரை மீது உள்ளது கூத்தனூர் என்பது. இவ்வூர் ஒட்டக்கூத்தர் புலமைக்காகச் சோழர்கள் வழங்கியது என்பர்.

ஒட்டக்கூத்தர் இராசராசசோழன் உலாவைப் பாடி அரங்கேற்றம் செய்தார். ஒவ்வொரு கண்ணியும் அரங்கேறும் போது ஓராயிரம் பொன் மன்னன் வழங்கி உள்ளான். இக்கொடையைச் சங்கர சோழன் உலாவும் தமிழ் விடு தூதும் விவரித்துள்ளன.

ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1173 வரை வரையறை செய்வர்.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link