fbpx
  • No products in the basket.

7.6. முக்கூடற்பள்ளு

திருநெல்வேலிக்கு வடகிழக்கே சித்திரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது. இவ்வூரில் எழுந்து அருளி இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது பாடப்பட்டதே முக்கூடற் பள்ளு ஆகும்.

முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர் ஆகும். முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் குறிக்கப்படுகிறது. பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் தன் பெயரில் ஓர் ஏரி கட்டினான். அது ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது. இதனால் இவ்வூர் சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர் கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டிருக்கும் திருமாலை 'அழகர்' என்றும் 'செண்டு அலங்காரர்' என்றும் முக்கூடற் பள்ளு புகழ்ந்து போற்றுகின்றது.

இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. புலவர் பெயரை அறிய முடியாவிட்டாலும் அப்புலவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும் நன்கறிந்த கவிஞர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்தி உள்ளன.

பள்ளன் தன் பெருமை கூறுவது, மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தத்தம் குடித்தரம் கூறும் பாடல்கள் தமிழ் மணப்பது.

மைக்கடல் முத்துக்கு ஈடாய்

மிக்க நெல் முத்து உண்டாக்கும்

வடிவழகக் குடும்பன் நானே

எனத் தான் விளைவிக்கும் நெல்லின் செருக்கு பேசும் பள்ளனை அறிமுகம் ஆகிறோம். மூத்த குடியாள், பெருமாள் பக்தையாகிய முக்கூடற்பள்ளியும், இளைய குடியாள், சிவனடியாளாகிய மருதூர்ப்பள்ளியும் போட்டிக்குப் பாடும் பாடல்கள் மிகவும் சுவையானவை.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image