fbpx
  • No products in the basket.

7.2. கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.

இதற்கு முன் ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி


நூலாசிரியர்

கவிகள் என்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிகளைச் சொல்பவர்கள் ஆவார்கள். அத்தகையவருகளுள் செயங்கொண்டார் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். குலோத்துங்க சோழனுடைய புகழையும் அவனின் தலைமைப் படைத்தலைவனான கருணாகரத்தொண்டைமானின் சிறப்பையும் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடி நிலை நிறுத்தியவர்.

இவருடைய ஊர், இயற்பெயர், பிறப்பு, வளர்ப்பு இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை. தீபங்குடிப்பத்து என்னும் நூலில் உள்ள மூன்றாவது பாடலிலும், தமிழ் நாவலர் சரிதையின் 117-ஆவது பாடலலும் இவருடைய ஊர் தீபங்குடி அறியமுடிகிறது. இவர் எந்தத் தீபங்குடி என்பதில் கூற முடியவில்லை. இருப்பினும் சோழநாட்டில் கொராடாச் சேரிக்கு அருகில் உள்ள தீபங்குடி என்பதாகும். இவருடைய காலம் 11-ஆம் நூற்றாண்டின் இறுதியாகவோ 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகவோ இருக்கலாம். இவரைப் பிற்கால புலவரான பலபட்டடைச்சொக்கநாதர், பரணிக்கோர் செயங்கொண்டார் எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இவர் கலிங்கத்துப்பரணி தவிர புகார் நகர வணிகர் பெருமக்களைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற நூலைப் பாடியுள்ளார். உலா மடல் என்ற பிறிதொரு நூலும் விழுப்பரையர் என்ற தலைவர் மீது பாடியுள்ளார்.

· கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி

· தமிழின் முதல் நூல் கலிங்கத்துப்பரணி.

· கலிங்கத்துப்பரணியை எழுதியவர் செயங்கொண்டார்.

· முதன் முதலில் பரணி பாடியவரும் இவரே.

· இவர் முதற்குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் ஆவார்.

· ஊர் திருவாரூரின் அருகே தீபங்குடி.

· காலம் 12ம் நூற்றாண்டு.

· இசை ஆயிரம், உலா மடல் என்பன செயங்கொண்டார் இயற்றிய வேறு நூல்கள்.

· இரண்டிரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் பாவகையைச் சார்ந்தது.

· இரு பிரிவுகளை உடையது இந்நூல்.


1.மக்கள் உலகம்  –  கடைதிறப்பு

-  அவதாரம்

-  இராசபாரம்பரியம்

-  போர் பாடியது

என நான்கு உறுப்புகள்


2. பேய் உலகம்  –  இந்திரசாலம்

-  பேய் முறைப்பாடு

-  காளிக்குக் கூளி கூறியது

-  களம் பாடியது

என நான்கு உறுப்புகள்


· தாழிசைகள் 599

· சோழமன்னன் முதற்குலோத்துங்கச் சோழன் (படைத்தலைவன் கருணாகரன்), கலிங்க நாட்டு மன்னன் அனந்தபதுமன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.

· முதற்குலோத்துங்கச் சோழன் ‘அபயன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்.

· தோற்றவனான கலிங்க நாட்டு மன்னனின் பெயரால் இந்நூல் கலிங்கத்துப்பரணி எனப் பெயர் பெற்றது.


“ஏழ்தலைப் பெய்த நூறுபடை இபமே

ஆடுகளத் தட்டாற் பாடுதல் கடனே”

- பன்னிருபாட்டில்


700 யானைகளைக் கொன்றவனுக்குப் பாடப்படுவது பரணி.


“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவ னுக்கு வகுப்பது பரணி”

- இலக்கணவிளக்கப்பாட்டியல்


1000 யானைகளைப் போர்க்களத்தில் கொன்று வெற்றி பெற்ற வீரனின் சிறப்பைப் பாடுவது.


· போரில் தோற்றவர் அல்லது தோற்றவரது நாட்டின் பெயரால் பரணி இலக்கியம் பெயர் பெறும்.

· கலிங்கத்துப் பரணியை முதற்குலோத்துங்கச்சோழ மன்னனின் அவையில் அரங்கேற்றினார்.

· பாடல்களின் சிறப்பை வியந்த மன்னன், போற்றியதோடு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன் தேங்காயைப் பரிசாக அளித்தான்.

· “பரணிக்கோர் செயங்கொண்டார்” எனப் பாராட்டியவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்.

· ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் பாராட்டியவர் – ஒட்டக்கூத்தர்


பிற பரணி நூல்கள்

வங்கத்துப் பரணி -  அரங்க சீனிவாசன்

திராவிடத்துப் பரணி -  இராசைக் கவிஞர்

சீனத்துப் பரணி -  மு.ப.பாலசுப்பிரமணியன்

வெற்றியால் பெயர் பெற்ற பரணி -  திருச்செந்தூர் பரணி

மோகவதைப் பரணி -  தத்துவராயர்

வாசவதைப் பரணி -  வைத்தியநாத தேசிகர்

புரட்சித்தலைவி போர் பரணி -  அக்கினிப்புத்திரன்

தக்கன் செய்த யாகத்தைச் சிவபெருமான் அழித்து

அவனை வென்ற பெருமையைப் பாடும் பரணி  -  தக்கயாகப் பரணி

கொப்பத்துப்பரணி, கூடல் சங்கமத்துப் பரணி -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link