fbpx
  • No products in the basket.

7.1. திருகுற்றாலக்குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றித் தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.


நூலாசிரியர்

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் தென்காசி மாவட்ட அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார் - இவரைத் தலைவராகக் கொண்டு நெஞ்சுவிடு தூது என்ற இலக்கிய படைப்பையும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.


· இது முதல் குறவஞ்சி நூல் ஆகும்.

· 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிகூடராசப்பக்கவிராயர் எழுதியது.

· இவர் தென்காசியைச் சேர்ந்தவர்.

· சொக்கம்பட்டி ஜமீன்தார் சின்ன நஞ்சதேவன் ஆதரித்தார்.

· குற்றாலநாதர் மீது வசந்தவல்லி கொண்ட காதலைக் குறித்தது இந்நூல்.

· வசந்தவல்லி குற்றாலநாதரின் உலாவைக் காண வருகிறாள்.

· அவரது அழகில் மயங்கி காதல் கொள்கிறாள்.

· குறத்தி அப்போது அவளுக்கு குறி கூறுகிறாள்.

· அவள் தலைவனின் மலைவளம், நாட்டுவளம் பற்றி பாடுகிறாள்.

· திருகுற்றாலக்குறவஞ்சி பாடியதற்காக மதுரையை ஆண்ட முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் “குறிஞ்சிமேடு” என்ற இடத்தைப் பரிசாகக் கொடுத்தார்.

“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்”

தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி. இந்நூல், திரிகூட ராசப்பக் : கவிராயரின் 'கவிதைக் கிரீடம்' என்று போற்றப்பட்டது. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் - விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி * முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.

சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின. அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.

குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது. பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.


சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல் கண்ணிகள்

சிங்கன் : இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்

எங்கே நடந்தாய் நீ சிங்கி? (எங்கே)

சிங்கி : கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்

குறிசொல்லப் போனனடா சிங்கா!

(குறிசொல்ல)

சிங்கன் : பார்க்கில் அதிசயம் தோணுது

சொல்லப்

பயமா இருக்குதடி சிங்கி!

(பயமா)

சிங்கி : ஆர்க்கும் பயமில்லை தோணின

காரியம்

அஞ்சாமல் சொல்லடா சிங்கா!

(அஞ்சாமல்)

சிங்கன் : காலுக்கு மேலே பெரிய விரியன்

கடித்துக் கிடப்பானேன் சிங்கி?

(கடித்து )

சிங்கி : சேலத்துநாட்டில் குறிசொல்லிப்பெற்ற

சிலம்பு கிடக்குதடா சிங்கா!

(சிலம்பு)

சிங்கன் : சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே

திருகு முறுகு என்னடி சிங்கி?

(திருகு)

சிங்கி : கோலத்து நாட்டார் முறுக்கிட்ட

தண்டை

கொடுத்த வரிசையடா சிங்கா!

(கொடுத்த)

சிங்கன் : நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல

நெளிந்த நெளிவு என்னடி சிங்கி?

(நெளிந்த)

சிங்கி : பாண்டிய னார்மகள் வேண்டும்

குறிக்காகப்

பாடகம் இட்டதடா சிங்கா !

(பாடகம்)

சிங்கன் : மாண்ட தவளை உன் காலிலே கட்டிய

மார்க்கம் அது ஏது பெண்ணே சிங்கி?

(மார்க்கம்)

சிங்கி : ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப்

பெண்கள்

அணிமணிக் கெச்சம் அடா சிங்கா!

(அணிமணி)

சிங்கன் : சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி

சுருண்டு கிடப்பானேன் சிங்கி?

(சுருண்டு)

சிங்கி : கண்டிய தேசத்தில் பண்டுநான் பெற்ற

காலாழி பீலியடா சிங்கா! (காலாழி)

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link