fbpx
  • No products in the basket.

5. பொருந்தாச் சொல்

கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் பொருந்தாத ஒரு சொல்லை கண்டுபிடிக்க வேண்டும். அதாவது, ஒரே வகையில் வரக்கூடிய மூன்று சொற்களும், ஒரு சொல் மட்டும் அந்த வகைக்கு சம்பந்தம் இல்லாத சொல்லாக கொடுக்கப்பட்டிருக்கும். அதை சரியாக தேர்தெடுக்க வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் பொருந்தாத ஒரு சொல்லை கண்டுபிடிக்க வேண்டும். அதாவது, ஒரே வகையில் வரக்கூடிய மூன்று சொற்களும், ஒரு சொல் மட்டும் அந்த வகைக்கு சம்பந்தம் இல்லாத சொல்லாக கொடுக்கப்பட்டிருக்கும். அதை சரியாக தேர்தெடுக்க வேண்டும்.

எ.டு : இறந்தகாலம், நல்லகாலம்,எதிர்காலம்,நிகழ்காலம்

இதில் இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகின முக்காலங்கள், எனவே நல்லகாலம் இதில் பொருந்தாத சொல்.

இதுமாதிரியான சில வகைகளை இங்கு தெரிந்துக்கொள்வோம்

அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கரிப்பு, துவர்ப்பு, கார்ப்பு

இருதிணை- உயர்திணை. அஃறிணை

இருவினை- நல்வினை, தீவினை

உயிரளபெடை- செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை

எட்டுப் பருவ ஆண்கள் - பாலன், மிளி, மறவோன், திறவோன், காளை, விடலை, முதுமகன், கிழவன்

எண்சுவை- நகை, அழுகை, இனிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

ஏழு பருவப் பெண்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண்

ஏழிசை- குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்

ஐந்திணை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐம்பால்- காணல், கேட்டல், உண்ணல், உயிர்த்தல், உற்றறிதல்

ஐம்பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி

ஐம்பூதம்- நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம்

ஐந்திலக்கணம்- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஐம்பெரும் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

ஐஞ்சிறு காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, உதயகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்

ஐம்பெருங்குழு- சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்

ஐம்புலன்- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை

ஐந்தொகை- முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்

சார்பெழுத்துகள்- உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்.

நவரத்தினங்கள்- கோமேதகம், மாணிக்கம், நீலம், முத்து, பவளம், புட்பராகம், வைடூரியம், மரகதம், வைரம்

நாற்றிசை- கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

நாற்படை- தேர், யானை, குதிரை, காலாட்படை

நால்வகை உணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்

நாற்குணம்- அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு

நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

நான்மறை- ரிக், யசூர், சாமம், அதர்வணம்

பத்துப்பாட்டு- திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுப்பணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை

பாவகை- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

பிள்ளைத்தமிழ் (பெண்பால்) - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்

பிள்ளைத்தமிழ் (ஆண்பால்) - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

புறத்திணை- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

பெரும்பொழுது- கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்

சிறுபொழுது- காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை

முப்பால்- ஆறாம், பொருள், இன்பம்

முக்கனி- மா, பலா, வாழை

முத்தமிழ்- இயல், இசை, நாடகம்.

முக்காலம்- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

மூவேந்தர்- சேர, சோழ, பாண்டியன்

முந்நீர்- ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்

மூவிடம்- தன்மை, முன்னிலை, படர்க்கை

முச்சங்கம்- முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்

மும்முரசு- கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link