• No products in the basket.

5. ஐம்பெருங் காப்பியங்கள்

5. ஐம்பெருங் காப்பியங்கள்

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்

ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி:

ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்துமே சமணக் காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற சொல்லை ஏற்படுத்தியவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

· நாககுமார காவியம்

· உதயகுமார காவியம்

· யசோதர காவியம்

· நீலகேசி

· சூளாமணி

நூல்
ஆசிரியர்
பாவகை
நூல் அமைப்பு
சமயம்
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள்
நிலைமண்டில ஆசிரியப்பா +  கொச்சக கலிப்பா

3 காண்ட ம், 30

காதை, 5001அடிகள்

சமணம்
மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார்
நிலைமண்டில ஆசிரியப்பா

30 காதை , 4755

வரிகள்

பௌத்தம்
சீவகசிந்தாமணி
திருத்தக்கதேவர்
விருத்தம்

13 இலம்பகம்,

3145 பாடல்கள்

சமணம்
வளையாபதி
 
விருத்தம்
72 பாக்கள் கிடைத்துள்ளன
சமணம்
குண்டலகேசி நாதகுத்தனார் விருத்தம் 224 பாடல்கள் கிடைத்துள்ளன பௌத்தம்
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.