TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது
· இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது
· இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப் பிரிப்பர்
· ஒற்றைச் சுரங்கள் இனிமையாகச் சேர்வது இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச் சேர்ந்தது
· ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள் தம்முள் ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும். மேலைநாட்டு இசை இந்த வகையைச் சார்ந்ததாகும்
· ஒவ்வோர் சுரத்திற்கும் வேறோர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைப்பது தொகுப்பிசை ஆகும்
· இசையின் ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
· சுரம் என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்
· இசைத்தல் என்பதும் பொருள்
· இசைத்தல் என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்
· “இசையே புணர்ச்சி” என்பது தொல்க்காப்பிய உரியியல் நூற்பா
· இந்தியாவில் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் உள்ளன
இசைக்கருவிகள்:
· உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றின
· தமிழ்நாட்டில் இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரிப்பர்
· தோல்கருவி 2. துளைக்கருவி 3. நரம்புக்கருவி 4. கஞ்சக்கருவி
· கஞ்சக் கருவி என்பது உலோகக் கருவிகளைக் குறிக்கும்
· தோல் கருவிகள் – பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி
· துளைக் கருவிகள் – வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு
· நரம்புக் கருவிகள் – யாழ, வீணை, கின்னரி
· கஞ்சக் கருவிகள் – கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி
· பஞ்சமரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி எனக் கூறுகிறது
· இன்று மேலைநாட்டு இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன
· முதல் சங்கத்தில் பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன
· பெருநாரை என்பது இசைப்பற்றிய நூல், நரம்பு – நார் – நாரை
· பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்
· இடை சங்கத்தில் பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன
· கடைச்சங்கத்தில் இசைமரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன
· தொல்க்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நிகண்டுகள், சைவ, வைணவ நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், உரை நூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன
· அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்ச பாரதீயம், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களைக் குறிப்பிட்டுள்ளனர்
· ஐந்து தினைக்கும் உரிய “யாழ” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன
· தமிழிசை வரலாறு:
· ஒவ்வொரு இனத்திற்கும் உரியதாய் ஓர் இசைமரபு இருக்கும். தமிழுக்கும் உரிய இசை மரபு தமிழிசை ஆகும்
· “இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார் தொல்காப்பியர்
· பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக் கூறுகிறது
· கலித்தொகையின் தாழிசை இசைப்பாட்டே
· பாணரும் கூத்தரும் இசை வளர்த்த கலைஞர்களே ஆவர்
· சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவரி, குன்றக்குரவை பகுதிகள் இசைப் பற்றியன
· களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின் திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன
· பல்லவர் காலத்தில் மூவர் முதலிகள் தமிழ் இசையை நன்கு வளர்த்தனர்
· நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது
· கொங்குவேள் மாக்கதையாகிய பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக் கூறுகிறது. உதயணன் இசைப்பாடி வென்று சுரமஞ்சரியை மணக்கிறான்
· முதலாம் மகேந்திரவர்மனின் குடிமியான்மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்
· பெரியபுராணத்தில் ஆனாயநாயனார் புராணத்தில் குழலிசை பற்றியும் திருநீலகண்ட அனாரின் புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன
· திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரி பாடின திருவிளையாடல் விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன
· அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்கள் தாளக் கலைக்கு வேதமாகத் திகழ்கிறது
· தமிழிசையும் ஆரிய சங்கீதமும் கலந்து கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்
· பண்டைய தமிழிசை கருநாடக சங்கீதமாக வழங்குகிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்
· ராகத்தை முதன்மையாககக் கொண்டது சங்கீதங்கள்
· சங்கீதத்தோடு பாட்டும் இணைந்தது சாகித்தியங்கள் ஆகும்
· சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்துப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசை வளர்த்தனர்
· இம்மொவரையும் “தமிழ் மூவர்” என்றும் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி மும்மூர்த்திகள்” என்றும் போற்றுவர்
· இம்மூவரே பல்லவி – அனுபல்லவி – சரணம் என்ற அமைப்பில் பாடும் பாடல் மரபைத் தோற்றுவித்தனர்
· இம்மரபைப் பின் வந்த சங்கீத மும்மூர்த்திகள் பின்பற்றினர்
· நாயக்கர் காலத்தில் தியாகையர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் மூவரும் கீர்த்தனைகள் பாடினர்
· ஆபிரகாம் பண்டிதர் “கருணாமிர்த சாகரம்” என்ற நூலை இயற்றினார்
· இலங்கையில் பிறந்த விபுலானந்த அடிகள் “யாழ் நூல்” இயற்றினார். வழக்கொழிந்து போன யாழ குறித்து ஆராய்ந்ததோடு “யாழ்” கருவியை செய்து அதனை மீட்டியும் காட்டினார்
· அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கம் வைத்துத் தமிழிசையைக் காத்தார்
· தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப் பாடுபட்டனர்