fbpx
  • No products in the basket.

4.5. ஆனந்தரங்கம் பிள்ளை

30.03.1709-ல் சென்னையை அடுத்த பெரம்பூரில் திருவேங்கிடம் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.

தமிழ், பிரெஞ்ச், பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றவர்.

தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்ந்தார்.

தமிழிலேயே கையெழுத்தும் இட்டார்.

இவரது தந்தை திருவேங்கிடம் புதுச்சேரியில் வணிகத் தொழில் செய்து வந்தார். 1726-ல் அவரது இறப்பிற்குப் பின்னால் அந்தத் தொழிலை இவர் ஏற்றார்.

அதன் பின் ஆளுநர் டியூப்ளெக்ஸ் அவர்களின் மொழிபெயர்ப்பாளராக இருந்த துபாசி என்பவர் இறந்ததால் பழமொழிகள் தெரிந்திருந்த இவர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

உலக நாட்குறிப்பு முன்னோடிகளில் “பெப்பிசு” என்பவரைப் போலவே தமிழில் இவரது நாட்குறிப்புகள் இருந்தமையால் இவர் “இந்தியாவின் பெப்பிசு” எனவும் “நாட்குறிப்பு வேந்தர்” எனவும் போற்றப்பட்டார்.

இவரது நாட்குறிப்புகள் 1736 முதல் 1761 வரை (சுமார் 25 ஆண்டுகள்) கிடைக்கப்பெறுகின்றன.

இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந்தார்.

1749-ல் முஷாபர்ஜங் இவருக்கு 3000குதிரைகளை வழங்கியதோடு மன்சுபேதார் என்ற பட்டமும் இவருக்கு வழங்கினார்.

மேலும் செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர் தாரராக நியமனம் ஆனார்.

டியூப்ளெக்ஸ் ஆட்சியில் ஆளுநர் மாளிகையில் (மங்கல ஒலிகள் ஒலிக்க) பல்லக்கில் செல்லும் உரிமை வழங்கப்பட்டது.

அத்துடன் தங்கக் கைப்பிடி இட்ட கைத்தடியுடன், செருப்பும் அணிந்து செல்லும் உரிமையும் வழங்கப்பட்டது

பொதுமக்களின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் இவர் பெற்றிருந்தார்.

இவர் டைரி என்பதற்கு பதிலாக “தினப்படி செய்திக்குறிப்பு” மற்றும் “சொஸ்த லிகிதம்” என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

சொஸ்தம் என்பதற்கு தெளிந்த அல்லது உரிமை உடைய என்பது பொருள்.

லிகிதம் என்பது கடிதம் அல்லது ஆவணம் என பொருள்படும்.


இவரது செய்திக்குறிப்பில்

வரலாற்றுச் செய்திகள், அரசியல் செய்திகள், நிர்வாகச் செய்திகள், தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, பிரெஞ்சுப்படை காரைக்காலைத் தாக்கி தோல்வியடைந்தது, பிரெஞ்சுப் படையில் தப்பி ஓடிய வீரன் பிடிபட்ட பிறகு அவனுக்கு 14 நாட்கள் சிறைதண்டனைக்குப் பிறகு மரண தண்டனை விதித்து போன்ற பல தகவல்களும் உள்ளன.

திருடர்களுக்கு கசையடிகள் கொடுக்கப்பட்ட நிகழ்வு, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வு போன்றவையும் இடம் பெறுகின்றன.

பெரியவர்களை மதிக்கும் பண்பு, வணக்கம் செய்தல், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு போன்றவையோடு மக்களின் பழக்க வழக்கங்கள், கோவில் திருவிழாக்களும் இடம்பெறுகின்றன.

சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியும், ஆளுநர் வருகை முதலான செய்தியும் இடம் பெறுகிறது.

ஆளுநர் வருகையிலும், அமர்விலும், உணவு உண்ணும் போதும், திரும்ப எழும் போதும் என ஒவ்வொரு நிகழ்விலும் 21 குண்டுகள் முழங்கிய செய்தியும் இடம் பெறுகிறது.

மேலும் ஆளுநருக்கு ₹1000/- அவரது மனைவிக்கு ₹100/- என தனிமையில் வழங்கியும், அத்தோடு பந்தலில் வெற்றிலை, பாக்கு, புஷ்பம் வழங்கிய செய்தியும் உள்ளது.

சில நேரங்களில் இவரது நாட்குறிப்பு எழுதப்பெறாமலும், முழுமை அடையாமலும் உள்ளது.

அருணாசலக்கவிராயர் அவர்கள் தமது ராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றி பிறகு மறுபடியும் ஒருமுறை ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் முன் அரங்கேற்றியதாக அறிய முடிகிறது.

இவரது நாட்குறிப்புகள் இருப்பதை “கலுவாமொம்பிரேன்” என்பரே கண்டறிந்தார்.

மேலும் இவரது நாட்குறிப்புகளில் சில பிரெஞ்சு மொழியில் “ஜூலியன் வென்சோன்” என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

1) ஆனந்தரங்கர் தனிப்பாடல்கள்

2) ஆனந்தரங்கர் புதினங்கள்

3) கள்வன் நொண்டிச்சிந்து

4) ஆனந்தரங்கன் கோவை  -  தியாகராச தேசிகர்

5) ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்  -  அரிமதி தென்னவன்

6) ஆனந்தரங்க விஜயசம்பு  -  சீனிவாசக்கவி (வடமொழி)

7) ஆனந்தரங்க ராட்சந்தமு  -  கஸ்தூரிரங்கக்கவி (தெலுங்கு)

போன்ற நூல்களும் வெளிவந்துள்ள.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image