fbpx
  • No products in the basket.

4.3. மு.வரதராசனாரின் கடிதம்

அன்னைக்கு தம்பிக்கு தங்கைக்கு நண்பர்க்கு என நான்கு கடித இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாறு மொழி வரலாறு மொழிநூல் நாவல்கள் எனப் பலவகைப்பட்ட நூல்கள் படைத்து தமிழ் தொண்டாற்றியுள்ளார்.

மு.வ.வின் பிறநூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கிய நூல்களே என்பர்.

நல்ல தமிழ்ப் பெயர்களைத் தன்னுடைய கடிதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள அண்ணன் வளவன் தம்பி எழில் என்று தொடங்கி எழுதியுள்ளார்.

“தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் வழங்கப்பட வேண்டும். ஆட்சி மொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லா பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்.”

“திருமணம் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செம்மொழியைப் போற்று. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தேர்ப்பாகக் கூடி உயர்வதைக் காணமுடியாதது பெருங்குறை. தமிழர்கள் நான்கு பேர் சேர்ந்து ஒரு மரமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது. நம்மிடையே பிரிக்கும் ஆற்றல் உண்டு; பிணைக்கும் ஆற்றல் இல்லை.

“இந்த நாட்டில் சொன்ன படி செய்ய ஆளில்லை; ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம் ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். தன்னை அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழுச்சி நேர்ந்தது என்று விவேகானந்தர் கூறுகிறார்.

தமிழர்கள் கூடிக்கூடி செயல் செய்து உயரும் வல்லமை உண்டு என்பதை நாம் உலகிற்கு உணர்த்தும் நாள் வர வேண்டும். அன்று தான் தமிழ் சமுதாயம் உயர வழி பிறக்கும்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image