fbpx
  • No products in the basket.

7.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

பகுதி அ - இலக்கணம் - ஆங்கில சொல்லிற்கான தமிழ் சொல் நாம் தினமும் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல்லிற்கான நேரான தமிழ் வார்த்தை என்னவென்றே இப்பகுதியிலிருந்து TNPSC தேர்வில் கேட்கப்படுகிறது.சமீபகாலமாக கணினி, அறிவியல் மற்றும் தொழிநுட்பம், இணையதளம் சார்ந்த ஆங்கிலச் சொற்களே பெரும்பான்மையாக கேட்கப்படுகின்றது.மேலும் இவற்றில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் மாதிரியான கேள்விகளை தாண்டியும், பொருத்துக வடிவிலான கேள்விகளும் கேட்கப்படுகிறது. எனவே அதிக படியான சொற்களை தெரிந்துக்கொள்வது நன்று.

டிவி - தொலைக்காட்சி

ரேடியோ - வானொலி

டெலிபோன் - தொலைபேசி

லைட் - விளக்கு

டீ - தேநீர்

தம்ளர் - குவளை

கரண்ட் - மின்சாரம்

டிபன் - சிற்றுண்டி

ஃபேன் - மின்விசிறி

பிளாட்பராம் - நடைமேடை

பேங்க் - வங்கி

ஆஸ்பத்திரி - மருத்துமனை

பிளைட் - வானூர்தி

சைக்கிள் - மிதிவண்டி

தியேட்டர் - திரையரங்கு

ரோடு - சாலை

நம்பர் - எண்

ஸ்கூல் - பள்ளி

இன்டர்நெட் - இணையம்

சயின்ஸ் - அறிவியல்

காலேஜ் - கல்லூரி

டெலஸ்கோப் - தொலைநோக்கி

மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி

தெர்மாமீட்டர் - வெப்பமானி

கம்ப்யூட்டர் - கணினி

பேப்பர் - தாள்

பேக்கரி - வெதுப்பகம்

ரிப்போர்ட் - அறிக்கை

நாஷ்டா - சிற்றுண்டி

பீரோ - இழுப்பறை

நாலெட்ஜ் - அறிவு

ரப்பர் - தேய்ப்பம்

டைம் - நேரம்

விசா - நுழைவு இசைவு

டிபார்ட்மென்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி

செக் - காசோலை

ஐஸ்கிரீம் - பனிக்கூழ்

இண்டர்வியூ - நேர்காணல்

ஜமீன் - நிலபுலம்

பஸ் - பேருந்து

மெயின்ரோடு - முதன்மைச் சாலை

விசிட்டிங்கார்டு - காண்புச் சீட்டு

புரோபோசல் - கருத்துரு

பைல் - கோப்பு

செகரட்டரி - செயலர்

பார்சல் - பொதி

எலாஸ்டிக் -  நெகிழி

மேனேஜர் - மேலாளர்

ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்

பிரீப்கேஸ் - குறும்பெட்டி

கவுன்சில் - மன்றம்

பேட்டி - நேர்காணல்

பாஸ்போர்ட் - கடவுசீட்டு

ரயில் - தொடர்வண்டி

அப்பாயிண்ட் - பணி அமர்தல்

புரோட்டோகால் - மரபுத்தகவு

டிசைன் - வடிவமைப்பு

ரெசிப்ட் - பற்றுச்சீட்டு

ஏஜெண்ட் - முகவர்

கீ - திறவுகோல்

ஏஜென்சி - முகலாண்மை

அட்மிசன் - சேர்க்கை

ஃபுட் போர்ட் - படிக்கட்டு

பிளாட்பாம் - நடைபாதை

ரெவின்யு - வருவாய்

ஃபிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி

ரிமைண்டர் - நினைவூட்டல்

டிஸ்மிஸ் - பணி   நீக்கம்

ஹேர்கட்டிங் சலூன் - முடி   திருத்தகம்

பால்கனி - முகப்பு   மாடம்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link