TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












இயற்பெயர்: ஜெகதீசன்
பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள்
பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)
பிறந்த வருடம்: 28 – 09 – 1940
புனைப்பெயர்: விடிவெள்ளி
சிறப்பு பெயர்: மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்.
நூல்கள்:
· தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
· சூரிய பிறை
· ஊமை வெயில்
· ஒரு வண்டி சென்ரியு
· நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
· நிலா வரும் நேரம்
· தீவுகள் கரையேறுகின்றன
· காலத்திற்கு ஒரு நாள் முந்தி
· தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)
· சிலிர்ப்புகள்
· விடியல் விழுதுகள்
· திரும்பி வந்த தேர்வலம்
· மின்மினி காடுகள்
· சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
· பொதுவுடமை பூபாளம்
· வணக்கம் வள்ளுவ
முக்கிய மேற்கோள்கள்:
· ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
· “சதை திரண்டு உன் வார்த்தைகளின் வீரம் கலகலத்து ஓடுகிறது” எங்கள் உள்ளங்களில் என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
· ஈரோடு தமிழன்பன் ஒரு பன்முக படைப்பாளி என்பதற்கான சான்று:
· தமிழக கவிஞர், ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்க கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கிய படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக ஆளுமைகளை கொண்டவர்தான் ஈரோடு தமிழன்பன்.
சில குறிப்புகள்
· சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
· தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
· 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் கலைமாமணி விருது பெற்றவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
· மரபுக் கவிதை எழுதி புதுக்கவிதைக்கு வந்த தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
· தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் phd பட்டம் பெற்றவர்.
· சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
· இவர் ஒரு “வானம்பாடி கவிஞர்” என்று அழைக்கப்படுகிறார்.
· “ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்க கவிஞர்” ஈரோடு தமிழன்பன் ஆவார்.
· “கவியரங்க கவிஞர்” என்று அழைக்கப்படுபவர் ஈரோடு தமிழன்பன்.
· இவர் “பாரதிதாசன் பரம்பரை கவிஞர்” ஆவார்.
· இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
· ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனும் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.
· தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
· “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது 2004ஆம் ஆண்டில் பெற்றார்.
· தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
· “அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின்” ஆசிரியர் தமிழன்பன் ஆவார்.
· மரபுக்கவிதை புதுக்கவிதை திறனாய்வு படைப்பதில் வல்லவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.