fbpx
  • No products in the basket.

3.7. சிற்பி

இயற்பெயர்: நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி

பிறந்த ஊர்: ஆத்துப்பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)

பெற்றோர்கள்: பொன்னுசாமி கவுண்டர் மற்றும் கண்டியம்மாள்

காலம் : 29 – 07 – 1936


முக்கிய குறிப்புகள்:

· கவிஞர் சிற்பி கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்கு பொறுப்பாளர் சாகித்திய அகடமி ஒருங்கிணைப்பாளர்

· கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல் ஓவியர்.

· சொல்லை தேர்ந்து செதுக்கி தமிழ் பாடல் ஆக்கும் வல்லமை கொண்டவர்.

· கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

· 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.

· அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (தமிழ் இலக்கியம்) கற்று 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

· 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

· லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை “அக்னிசாட்சி” எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி.

· இந்நூல் 2000 ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றது.

· மேலும் “ஒரு கிராமத்து நதி கரையில்” எனும் நூலுக்கு 2002ல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது.

· தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகடமி விருது பெற்ற பெருமை கவிஞர் சிற்பிக்கு மட்டுமே சேரும்.


விருதுகள்:

· மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்க்காகவும் இருமுறை சாகித்ய அகடமி விருது பெற்றவர் கவிஞர் சிற்பி.

· தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்.

· குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மகாகவி உள்ளூர் விருதும் பெற்றார்.

· மூத்த எழுத்தாளர் களுக்காக லில்லி தேவசிகாமணி விருது என பல விருதுகள்.

· தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.

· கவிஞர்கோ எனும் பட்டம் குன்றகுடி அடிகளர்களால் கவிஞர் சிற்பிற்கு வழங்கப்பட்டது.


அறக்கட்டளை:

· 1996 இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் பரிசுகள் அளித்து வருகிறது.


கவிதை நூல்கள்:

· ஒரு கிராமத்து நதி 1998 (சாகித்திய அகடமி விருது பெற்றது 2002 ஆம் ஆண்டு)

· சிற்பியின் கவிதை வானம்

· நிலவுப்பூ

· சிரித்த முத்துக்கள்

· ஒளிப்பறவை (தளை)

· புன்னை பூக்கும் பூனைகள்

· நீலக்குருவி

· இறகு

· மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது)

· சூரிய நிழல்

· பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு

· சர்ப்பயகம்

· தேவயானி

· மூடுபனி

· பூஜ்யங்களின் சங்கிலி ( தமிழக அரசு பரிசு பெற்றது 1999)

· பாரதி கைதி எண் – 253

· மகாத்மா

· ஆதிரை (கவிதை நாடக நூல்)

· அக்னி சாட்சி

· சிற்பி கவிதைகள் தொகுதி – 2


உரைநடை நூல்கள்:

· மகாகவி

· இலக்கிய சிந்தனைகள்

· மலையாளக் கவிதை

· சிற்பியின் கட்டுரைகள்

· படைப்பும் பார்வையும்

· புதிர் எதிர்காலம்

· மனம் புகும் சொற்கள்

· கவிதை நேரங்கள்

· காற்று வரைந்த ஓவியம்

· மின்னல் கீற்று

· நேற்றுப் பெய்த மழை

· அலையும் சுவடும்

· இல்லறம் நல்லறம்


சிறுவர் நூல்கள்:

· சிற்பி தரும் ஆத்திசூடி

· வண்ணப்பூக்கள்


வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

· ராமானுஜர் வரலாறு

· ம. ப. பெரியசாமி தூரன்

· பாரத ரத்னா சி. சுப்பிரமணியம்

· ஆர். சண்முகசுந்தரம்

· சே.பா. நரசிம்மலு நாயுடு

· மகாகவி பாரதியார்

· நம்மாழ்வார்

· தொண்டில் கனிந்த தூரன்


மொழிபெயர்ப்பு நூல்கள்:

· சச்சிதானந்தன் கவிதைகள்

· கவிதை மீண்டும் வரும்

· காலத்தை உறங்க விடமாட்டேன்

· கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகள்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image