fbpx
  • No products in the basket.

3.5. இரா. மீனாட்சி

பிறப்பு : 1941

பிறந்த ஊர்: திருவாரூர்

பெற்றோர்கள்: ராமச்சந்திரன் (தந்தை) – மதுரம் (தாய்)


வேறு பெயர்:

ராமச்சந்திரன் அல்லது மீனாட்சி என அழைக்கப்படுகிறார்.


முக்கிய குறிப்புகள்:

· கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ் கவிஞர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.

· நவீன தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர் என்பது நினைவுக்கு வருகிறது.

· சி. சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி.

· தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில தொண்டாற்றி வருகிறார்.

· இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

· கவிஞர் இரா. மீனாட்சி எழுதிய “செம்மண் மடல்கள்” எனும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.

· மேலும் இவர் சிறந்த சித்த மருத்துவ சேவைக்காக ஸ்ரீபுத்தூ மகரிஷி அறக்கட்டளை வழங்கிய “சித்த மருத்துவ சேவை செம்மல்” எனும் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கவிதை நூல்கள்:

· உதய நகரிலிருந்து (2006)

· மீனாட்சி கவிதைகள் (2002)

· தீபாவளி பகல் (1983)

· செம்மண் மடல்கள்(தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது)

· சுடு பூக்கள் (1978)

· மறு பயணம் (1998)

· வாசனைப்புல் (2006)

· கொடி விளக்கு (2009)

· நெருஞ்சி (1970)

· ஆங்கில படைப்பு

· ஓவியா (2009)

· இந்திய பெண்கவிகள் பேசுகிறார்கள்.


தொகுப்பு நூல்கள்:

· கொங்குதேர் வாழ்க்கை

· பறத்தல் அதன் சுதந்திரம்

· சிற்றகல்


விருதுகள்:

· சிற்பி இலக்கிய விருது (2005)

· புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது (2007)

· “உதய நகரிலிருந்து” என்ற புதுக் கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது (2006)

· திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2007)

· புதுவை பாரதி விருது (2010)

· கவிக்கோ விருது (2010)

· தற்போது இரா. மீனாட்சி அவர்கள் சாகித்திய அகாடம ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார்

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image