fbpx
  • No products in the basket.

3.12. கல்யாண்ஜி

“வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவரின்

இயற்பெயர் “சி. கல்யாணசுந்தரம்”

பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம்

பிறந்த வருடம்: 1946


புனைப்பெயர்கள் : வண்ணதாசன் (சிறுகதை), கல்யாண்ஜி (கவிதை).

இதழ்:

கல்யாண்ஜி முதன் முதலில் “தீபம்” என்ற இதழில் கவிதைகளை எழுதினார்.


முக்கிய குறிப்புகள்:

· கல்யாண்ஜியின் தந்தை; தி. க. சிவசங்கரன் ஒரு “இலக்கியவாதி”.

· இவரது தந்தைக்கு 2000ம் ஆண்டில் “சாகித்திய அகடமி விருது” வழங்கப்பட்டது.

· கல்யாண்ஜி வங்கியில் பணிபுரிந்தார்.

· கல்யாண்ஜி சிறுகதை எழுதுவதில் வல்லவர் ஆவார்.

· கல்யாண்ஜி “1962ல் சிறுகதை எழுதத் தொடங்கினார்” என்பது குறிப்பிடத்தக்கது.

· புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜியின் சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

· நவீன தமிழ் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜி ஆவார்.


விருதுகள்:

· இவரது ஒரு “சிறுஇசை” என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016ம் ஆண்டுக்கான சாகித்திய அகடமி விருது கிடைத்தது.

· இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன் என்கின்ற கல்யாண்ஜி.

· 2016ஆம் ஆண்டு “விஷ்ணுபுரம் விருது” இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

· 2018 – ல் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.2

· தமிழக அரசு வண்ணதாசனுக்கு (கல்யாண்ஜி) “கலைமாமணி” என்ற விருதை வழங்கியுள்ளது.


நூல்கள்:

கவிதை நூல்கள்:

· மணல் உள்ள ஆறு

· அந்நியமற்ற நதி

· ஆதி

· முன்பின்

· புலரி


கட்டுரைத் தொகுப்பு நூல்:

· அகமும் புறமும்


கடிதங்கள்:

· பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.

· வண்ணதாசன் கடிதங்கள்


புதினங்கள்:

· சின்னு முதல் சின்னு வரை

· கல்யாண்ஜி எழுதிய சிறுகதை நூல்கள்:

· சமவெளி

· கிருஷ்ணன் வைத்த வீடு

· மனுஷா மனுஷா

· ஒளியிலே தெரிவது (உயிர்மை சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டின் சிறுகதைக்கான சுஜாதா விருதினை இந்நூல் பெற்றது)

· தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

· பெயர் தெரியாமல் ஒரு பறவை

· ஒரு சிறு இசை

· கனிவு

· சில இறகுகள் சில பறவைகள்

· நடுகை

· உயரப் பறத்தல்

· கலைக்க முடியாத ஒப்பனைகள்


மேற்கோள்கள்:

· “சைக்கிளில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை”

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image